மோடியின் சுய ஊரடங்கு உத்தரவு குறித்து ரஜினி பேசி வெளியிட்ட வீடியோ ட்விட்டரில் இருந்து நீக்கப்ட்டது பெரும் விவாதமாக மாறியுள்ளது. கொரோனா பாதிப்பை குறைக்கும் விதத்தில் மோடி அறிவித்த இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் பல்வேறு ஆதரவுகள் குவிந்து வந்தது. மேலும், பல்வேறு பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும், நடிகர் நடிகைகளும் மோடியின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து தங்களது ஆதரவை கண்டிப்பாக வழங்குவோம் ரசிகர்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் வீடியோ மூலமாக கேட்டுக்கொண்டனர். கொரோனா பாதிப்பை குறைக்கும் விதத்தில் மோடி அறிவித்த இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் பல்வேறு ஆதரவுகள் குவிந்து வந்தது.

மேலும், பல்வேறு பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும், நடிகர் நடிகைகளும் மோடியின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து தங்களது ஆதரவை கண்டிப்பாக வழங்குவோம் ரசிகர்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் வீடியோ மூலமாக கேட்டுக்கொண்டனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் ரஜினிகாந்த், மோடியின் சுய ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை ஆதரிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய ரஜினிகாந்த், கொரோனா பாதிப்புகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது அது மூன்றாவது கட்டத்திற்குப் போய்விடக்கூடாது.

Advertisement

இதையும் பாருங்க : விஜய்யை திருமணம் செய்துகொள்ள ஆசை. திருமணமாகாத ஜீவா பட நடிகை பேட்டி.

பொது இடங்களில் இருக்கும் கொரோனா வைரஸ், 12-14 மணிநேரங்கள் பரவாமல் இருந்தாலே இந்த மூன்றாவது கட்டத்தை அடையாமல் தடுத்து நிறுத்திவிடலாம். இதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சுய ஊரடங்கு உத்தரவைக் கொடுத்துள்ளார். இதே போன்று இத்தாலியிலும் கொரோனா இரண்டாவது கட்டத்தில் இருக்கும்போதே அரசால் இப்படியான சுய ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோகியுள்ளது. இதனால் இதை நாம் நிச்சயம் கடைப்பிடிக்கவேண்டும்.” என்று பேசியிருந்தார்.

Advertisement

இதையும் பாருங்க : பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்த நடிகையா இது. திருமணம் வேறு ஆகிடுச்சாம்.

Advertisement

இந்த வீடியோ ட்விட்டரில் பத்விட்ட சில மணி நேரத்தில் வைரலாக பரவிய நிலையில் இந்த வீடியோ ட்விட்டரில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டது. மேலும், ரஜினியின் இந்த வீடியோ ட்விட்டர் விதிமுறைகளுக்கு அப்பார்பட்டு இருப்பதால் இந்த வீடியோ நீக்கப்பட்டது என்று ட்விட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி என்ன ரஜினி இந்த வீடியோவில் தவறாக பேசி விட்டார் என்று ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் ரஜினியின் வீடியோ எதற்காக ட்விட்டர் இருந்து நீக்கப்பட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நல்லெண்ணத்தில் ரஜினி இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கலாம் ரஜினியின் இந்த வீடியோவில் தவறான கருத்து இருப்பதாக சில செய்திகள் காட்டுத்தீ போல பரவியது இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வைரஸ் 12 மணி நேரத்தில் உயிரிழந்த விடும் என்பதற்கான எந்த ஒரு ஆய்வு முடிவுகளும் தற்போதுவரை அறிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement