பாலிவுட்ல அவருக்கு பெயர் மாத்தனவர் தான் எனக்கும் மாத்தனார், அதுக்கு காரணம் இதான் – விக்னேஷ் சிவன் சொன்ன சீக்ரெட்.

0
485
vignesh
- Advertisement -

தன் பெயர் எழுத்து மாற்றாத்திற்கான காரணத்தை விக்னேஷ் சிவன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனிடையே விக்னேஷ் சிவன்- நயன் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் மிகவும் privateஆக முடிந்தது. ஆனால், திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்கள். நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

இருந்தாலும் இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் பணிபுரிந்து இருந்தார்கள். கடந்த வாரம் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் கிரிக்கெட் பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை:

படத்தில் விஜய் சேதுபதி வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வந்த விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

-விளம்பரம்-

அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணி:

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீபகாலமாகவே விக்னேஷ் சிவன் பெயர் குறித்து கேலி, கிண்டல் என சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது vignesh shivan என்பதை vignesh shivn என்று வைத்து இருக்கிறார்கள். இதை தான் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய பெயர் 13 லட்டர்ஸ் வரும். நியூமராலஜி படி 13 லட்டர் இருக்கக்கூடாது என்று சொன்னார்கள்.

விக்னேஷ் சிவன் பெயர் மாற்றம்:

அப்படி இருந்தால் தேவையில்லாமல் பிரச்சனைகள் வருமாம். அதானல் என் பெயரை 12 எழுத்தாக மாற்ற முயற்சி செய்தோம். முதலில் vignesh இருந்து h எடுக்க முடிவு செய்தோம். அப்புறம் எல்லோருக்கும் இந்த மாதிரி பெயர் இருப்பதால் வேணாம் என்று விட்டுவிட்டோம். அதற்கு பிறகு அஜய் தேவ்கான் கூட அவருடைய பெயரில் மாற்றம் செய்து இருப்பார். அதை சொல்லி அதற்கு பிறகு தான் என்னுடைய பெயரில் vignesh shivan இருந்து a எழுத்தை எடுத்து vignesh shivn என 12 எழுத்தாக மாற்றி இருந்தோம். ஆனால், இது புரியாமல் பலரும் கிண்டல் செய்திருந்தார்கள். சரி பண்ணிக்கோங்கன்னு நான் விட்டுவிட்டேன் என்று கூறியிருந்தார்.

Advertisement