ஜூலி மற்றும் ஆர்த்தி இன்று வெளியேற்றப்படுவார்களா ?

By Tamil Selvam · 9/9/2017
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய ஜூலி மற்றும் ஆர்த்தி, இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இருவரும் ஒரு வாரத்தில் வெளியேற்றப்படுவார்கள் என்று பிக் பாஸ் கூறினார். ஆனால் சென்ற வாரம் அவர்கள் வெளியேற்றப்படவில்லை. அவர்களை மீண்டும் ஒரு வாரம் உள்ளெ இருக்கும்படி கமல் கூறினார். ஜூலியயை வாக்களித்து வெளியேற்றிய மக்களுக்கு இதனால் வெறுப்பு அதிகமானது. சமூக ஊடகங்களில் இதற்கான எதிர்ப்பு அதிகரித்தது. இதனிடையே அவர்கள் இருவரும் இன்று வெளியேற்றப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி மீண்டும் உள்ளெ சென்றதால் இன்னும் அதிக வெறுப்பாளர்களையே சம்மதித்துள்ளார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே செல்லும்போது அவருக்கு இருந்த ரசிகர்கள் இப்போது இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full