கேலிகளுக்கு கூட அஞ்சவில்லை, அந்த ஒரு கமன்ட்டால் தான் நான் இன்ஸ்டகிராமில் இருந்து விலகினேன் - வீடியோ வெளியிட்ட பிரியா வாரியர்.

By Rajkumar · 3/6/2020

உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை ஒரே பிரியா வாரியர். தன் கண் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாகவே ரசிகர்களை தன் பக்கம் கவனித்தார். மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய குட்டி குட்டி குயூட் ரியாக்சன் மூலம் சடசடவென உலகம் முழுவதும் பேமஸ் ஆகி விட்டார். சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேருக்கு மேல் பாலோ செய்கிறார்கள்.

மேலும், இந்த ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம். இருந்தாலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அம்மணிக்கு பாலிவுட் வரை வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : பெரிய காக்க முட்டையை விடுங்க, எல்லோராலும் விரும்பப்பட்ட சின்ன காக்கா முட்டை எப்படி இருக்கார் பாருங்க.

இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பிரியா வாரியர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடுக்கவுதாக அறிவித்து தனது ரசிகர்களுக்கு சாக் கொடுத்தார். இந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் இருந்து தான் ஏன் விலகினேன் என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CA5J2RogYCh/

அந்த வீடீயோவில் பேசிய பிரியா வாரியர், கடந்த இரண்டு வாரங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், இருப்பினும், இது எனது தொழில்முறை இடம் என்பதால், நான் திரும்பி வந்துள்ளேன். லைக்ஸ், ஃபாலோஸ் மற்றும் வியூஸ் குறித்து நான் அழுத்தமாக இருப்பதாக உணர்ந்தேன். மேலும், கேலிகளுக்கு கூட கவலைப்படவில்லை. ஆனால், நான் பிரபலத்திற்காக பதிவுகளை போடுகிறேன் என்று கமன்ட் என்னை மிகவும் காயப்படுத்தியது என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full