பெரிய காக்க முட்டையை விடுங்க, எல்லோராலும் விரும்பப்பட்ட சின்ன காக்கா முட்டை எப்படி இருக்கார் பாருங்க.

0
2832
Chinna-kakka-muttai
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த எத்தனையோ நட்சத்திரங்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சின்ன காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை என்ற கதாபாத்திரத்தால் நடித்த சிறுவர்களை ரசிகர்கள் கண்டிப்பாக மறந்திருக்க முடியாது. தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்ட, ‘காக்கா முட்டை’ படம் பெரும் வெற்றியைப் பெற்றுதுடன் பல்வேறு வசூல் சாதனைகளையும் செய்தது.

-விளம்பரம்-

எம்.மணிகண்டன் இயக்கிய இந்த படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.அத்தோடு இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது.இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏற்றது.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த பெரிய காக்க முட்டையாக நடித்த விக்னேஷ், காக்கா முட்டை படத்திற்கு பின்னர் அப்பா, அப்பா 2,அறம் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் விக்னேஷ்ஷின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கிடைக்கப்பட்டது. அதில் பெரிய காக்கா முட்டையா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறியுள்ளார்.

காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தை விட ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் சின்ன காக்க முட்டை தான். காக்க முட்டை படத்தில் சின்ன காக்க முட்டையாக நடித்த ரமேஷ் நடித்த ரமேஷ்ஷை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement