'8000 கோடி பேருக்கு 5000 கோடி' - ஒய் ஜி மகேந்திரன் மகளை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 10/4/2020

கொரோனா வைரஸத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலகமே ஆட்டம் கண்டு போய் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவினால் 6412 பேர் பாதிக்கப்பட்டும், 199 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில் இதை நீடிப்பதாகவும் ஒருபக்கம் கூறப்பட்டு வருகிறது .

https://www.facebook.com/mano.bpharm/videos/2264415753662135/

மேலும், ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அனைவரின் வீட்டிலும் 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று மோடி கோரிக்கை வைத்தார். இதனால் பலரும் பல்புகளை அணைத்து விளக்குகளை ஏற்றி வைத்தார்கள். அதிலும் ஒரு சில பேர் பட்டாசுகளை வெடித்து திருவிழா போன்று கொண்டாடினார்கள். மோடி அவர்கள் சொன்னதை எதிர்த்து புறக்கணிக்கும் வகையிலும் சில பிரபலங்கள் தங்களது பதிவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள்.

இதையும் பாருங்க : தனது மகளுக்கு அம்மாவின் நினைவாக பெயர் வைத்துள்ள ராதிகாவின் மகள்.

அதேபோல் பலரும் மோடியின் செயலுக்கு ஆதரவையும் தெரிவித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் பிரதமர் மோடியின் பிஜேபி கட்சியின் தீவிர தொண்டண்டர்களில் ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர். இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்டவர். இவருடைய மகள் தான் மதுவந்தி. இவரும் பிஜேபி கட்சியின் தீவிர தொண்டர். இவர் பிஜேபிக்கு ஆதரவாக பல வீடியோக்களை செய்துள்ளார்.

https://twitter.com/KAG_SekarTwitz/status/1248231578733432833

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுவந்தி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியது. இவர் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் உள்ளார் என்று சொல்லலாம். அது என்னவென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து அனைவரும் தீபமேற்ற வேண்டும் என்று மோடி கோரிக்கை கோரிக்கை விடுத்திருந்தார். இதற்காக பலரும் ஆதரவாக பேசி வந்தார்கள்.

இதையும் பாருங்க : பிரசாந்தால் அசிங்கப்பட்டாரா அஜித் ? பல வருட கேள்விக்கு கிடைத்த விடை இந்த வீடியோ.

அதற்கு நடிகை மதுவந்தி கூறி இருப்பது, 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை ஏற்றும் போது ஒன்பது கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வருவதாக வானியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். அதன் மூலம் கொரோனா சக்தி குறையும் என அறிவித்தார். அதனைக் கேட்ட நெட்டிசன்கள் அவரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்க தொடங்கினர். இந்நிலையில் தற்போது மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு 5000 கோடியை அவர்களது வங்கி கணக்கில் உஜ்ஜவாலா திட்டத்தின் கீல் மோடி செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/naatupurathan/status/1248246492248166400

இந்த தகவல்களுக்கு ஆதாரமாக பிரபல நாளிதழையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். மதுவந்தியின் இந்த பேச்சை கேட்டு நெட்டிசன்கள் அனைவரும் திக்குமுக்காடி வாயடைத்துப் போனார்கள். இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையே 140 கோடி தான். உலகம் முழுக்க உள்ள மக்கள் தொகையை கூட்டினால் கூட 8,000 கோடி வராது. மதுவந்தி சொல்வதுபோல் 8,000 கோடி மக்களுக்கு 5000 கோடி ரூபாயை பிரித்தால் 62 பைசா தான் வரும். முழுதாக ஒரு ரூபாய் கூட வராது. இதை தான் அனைத்து பெண்களின் வங்கி கணக்கிற்கு மோடி அனுப்பி விட்டதாக பெருமையுடன் கூறுகிறார் மதுவந்தி என்றும், இதை பார்த்து கடுப்பான சிலர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதீர்கள். இது ஒரு மன நோய் விரைவாக வைத்தியம் செய்யுங்கள் என்றும் பயங்கரமாக கிண்டல், கேலியும் செய்துள்ளார்கள்.

https://twitter.com/AnirudhSriraman/status/1248284613182492672

மதுவந்தி அவர்கள் தர்மதுரை, கடம்பன், சிவலிங்கா, தாராளப் பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலையும் இவர் தான் நடத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல் தனது தந்தையின் மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார். பள்ளி நிர்வாகி, நடன கலைஞர் என பன்முகம் கொண்டவர் மதுவந்தி.

behindtalkies AMP · Quick view
View full