தனது மகளுக்கு அம்மாவின் நினைவாக பெயர் வைத்துள்ள ராதிகாவின் மகள்.

0
86478
riyan
- Advertisement -

தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா. நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப். இவரை 1985 ஆம் ஆண்டு ராதிகா திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

அதன் பின்னர் ராதிகா லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பிறகு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், நடிகர் சரத்குமாருக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார்.

இதையும் பாருங்க : பட வாய்ப்புகள் இல்லாததால் தினமும் கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசி வரும் நடிகை.

- Advertisement -

ராதிகா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார்– ராதிகாவின் மகள் ரேயான்க்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாயாக உள்ளார். ரேயான் மற்றும் அபிமன்யு மிதுன் தம்பதியருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது.

இந்த கடந்த மாதம் 15 ஆம் தேதி ரேயான் மிதனுக்கு பெண் குழந்தை பிறந்தது, இதனை பிக் பாஸ் புகழ் சுஜா வருணீ தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். குழந்தை பிறந்து ஒரு மாதம் நெருங்கும் நிலையில் குழந்தையின் புகைப்படத்தை இதுவரை பதவிடாத ரேயான் தம்பதியினர் தனது மகளுக்கு பெயர் வைத்துள்ளார்கள்.

இதையும் பாருங்க : பிரசாந்தால் அசிங்கப்பட்டாரா அஜித் ? பல வருட கேள்விக்கு கிடைத்த விடை இந்த வீடியோ.

-விளம்பரம்-

தனது இரண்டாவது மகளுக்கு ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளதாக ரயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் ரேயான். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ரெயான், தனது குழந்தையின் பெயர் என்னை பெற்றவர்களிடம் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ள ரேயான், என் மகளும் எனது அம்மா போல அருமையானவளாக வருவாள் என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார். அம்மா என்றால் அவ்வளவு உயிர். அதனால் தான் ராதிகாவின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக குழந்தைக்கு ராத்யா என்று பெயர் வைத்துள்ளார் ரெயான்.

Advertisement