இயக்குனர் வெங்கட் கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

இலங்கை அகதிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம். ஒரு லட்சியத்தை நோக்கி செல்லும் அகதி தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினை தான் படத்தின் கதையாக இருக்கிறது. படத்தில் ஒருவர் சிறு வயதிலேயே அகதியாக ராணுவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின் சில வருடங்கள் இவர் தண்டனை அனுபவித்து ஒரு இளைஞனாக கள்ளத் தோணி ஏறி இந்தியாவிற்கு வருகிறார். கேரளாவில் சில வருடங்கள் அவர் தங்கி இருந்து முறையான இசையை கற்றுக் கொள்கிறார்.

Advertisement

பின் லண்டனில் நடக்கும் ஒரு இசை போட்டியில் கலந்து கொள்ள அந்த அகதி புனிதன் முயற்சிக்கிறார். ஆனால், எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் அவரிடம் இல்லாததால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் இவர் கிருபாநிதி என்ற வேறொரு பெயரில் அடையாளத்தை வாங்குவதற்கு கொடைக்கானல் செல்கிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதிக்கு மேகா ஆகாஷ் மீது காதல் வருகிறது. இன்னொரு பக்கம் விஜய் சேதுபதியை பழிவாங்க போலீஸ்காரர் துடிக்கிறார்.

இறுதியில் அங்கு அதற்கான சான்றிதழ்களை அவர் பெற்றாரா? அகதி தன்னுடைய லட்சியத்தை அடைந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் அகதி புனிதன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி அடிக்கடி இலங்கை தமிழ் பேசுவதால் அவரை இலங்கை தமிழர் என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், அவருடைய தோற்றத்திற்கு தான் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. மேலும், அவருடைய மேக்கப் செட் எல்லாம் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை.

Advertisement

இசை கலைஞர் என்றால் விக்கு வைக்கணுமா? முடி நீளமாக இருக்க கூடாதா? என்ற கேள்வியும் எழுகிறது. அதோடு அதிக ஈடுபாடுடன் நடிக்கும் விஜய் சேதுபதி இந்த படத்தில் காணவில்லை. ஏதோ நடித்துக் கொடுக்க வேண்டும் என்பது போல் நடித்து இருக்கிறார். இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி பேசும் வசனம் எல்லாம் பார்வையாளர்களை உருக வைத்திருக்கிறது விஜய் சேதுபதி- மேகா ஆகாஷ் இடையான காதல் காட்சிகள் பெரிதாக இல்லை. அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய ஜோடியும் பொருத்தம் இல்லை என்று தான் சொல்லணும்.

Advertisement

படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. ரொம்ப எமோஷனல் ஆன கதை. ஆனால், கதைக்களத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பொதுவாகவே இலங்கை அகதி, இலங்கை தமிழர்கள் கதை அதிகமாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு சில படங்கள் தான் இருக்கிறது. இந்த மாதிரி தருணத்தில் இயக்குனர் இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் கவனமும் சுவாரசியமும் கொண்டு சென்றிருந்தாளல் படம் பெருமளவு வெற்றி பெற்றிருக்கும். மொத்தத்தில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது

நிறை:

இலங்கை அகதியின் கதை

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

எமோஷனல் கதை

இந்தப் படத்தில் சர்ச் பாதர் ஆக மறைந்த நடிகர் விவேக் நடித்திருக்கிறார் இவருடைய கதாபாத்திரம் பார்வையாளர்களை ஈர்த்து இருக்கிறது என்று சொல்லலாம்

குறை:

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும் கதைக்களமும் இல்லை

விஜய் சேதுபதி இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம்

ஆங்காங்கே நிறைய லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர்- அடையாளத்தை தேடி

Advertisement