மாணவர்களுக்கு யாஷிகா ஆனந்த் போட்ட ஆட்டோகிராப்.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

0
1130
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதையும் படியுங்க : மஹத் மற்றும் யாஷிகாவின் புகைப்படத்தை பதிவிட்ட விஜய் டிவி..!கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..! 

- Advertisement -

சமீபத்தில் நடிகை யாஷிகா தீம் பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கே வந்திருந்த சில மாணவர்கள் யாஷிகாவிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அவரிடம் ரூபாய் நோட்டுக்களில் ஆட்டோக்ராப்பையும் வாங்கியுள்ளனர். தற்போது இந்த விடயம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ரூபாய் நோட்டுக்களில் கையப்பம் போடுவது சட்டப்படி குற்றம் என்று இருக்கையில் அதனை அறியாது யாஷிகா செய்துள்ள இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது. மாணவர்கள் தான் வயது கோளாறில் கேட்டார்கள் என்றால் மற்ற விடயங்களில் மட்டும் தெள்ள தெளிவாக இருக்கும் யாஷிகாவிற்கு ரூபாய் நோட்டில் கையப்பம் போடுவது குற்றம் என்று தெரியாதா என்ன.

-விளம்பரம்-
Advertisement