அப்போ மஹத் இப்போ இந்த நடிகரா.!காதலில் விழுந்த யாஷிகா.! விளங்கிடும்.!

By Rajkumar · 26/1/2019

கவலை வேண்டாம், துருவங்கள் 16 போன்ற படங்களில் ஓரமாக நடித்து பின்னர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல இளசுகளின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரடுக்குத்து பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்குபெற்றார். திரைப்படங்களை விட இவருக்கு அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதையும் படியுங்க : யாஷிகாவின் சமீபத்திய க்ரஷ் இவர் தானாம்.!அவரே சொன்ன ரகசியம்.! 

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நடிகர் மஹத்துடன் காதலில் விழுந்தார் யாஷிகா. ஆனால், மஹத் ஏற்கனவே பிராச்சி என்பவரை காதலித்து வந்ததால் மஹத்தை மறக்க முடியாமல் சில நாட்கள் தவித்து வந்தார் யாஷிகா. இந்நிலையில் 'நோட்டா' பட நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் காதல் வலையில் விழுந்துள்ளார் யாஷிகா.

விஜய் தேவர்கொண்டாவுடன் 'நோட்டா' படத்தில் நடித்துள்ளார் யாஷிகா. சமீபத்தில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவர்கொண்டாவின் புகைப்படத்தை பதிவிட்டு'உன்னை மறக்க முடியவில்லை, நீ தான் என் அன்பானவர்' என்று பதிவிட்டு கூடவே அழுதுகொண்டிருக்கும் ஒரு ஸ்மைலியையும் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு மட்டுமில்லை, ஒரு லவ் பாடலை பதிவிட்டு அதில் ஏன் என்று தெரியவில்லை, நீ இப்போது அதை பற்றி நினைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது யாஷிகா விஜய் தேவர்க்கொண்டாவுடன் காதலில் விழுந்துள்ளாரா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுலமில்லைசமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த யாஷிகா தனது சமீபத்திய க்ரஷ் விஜய் தேவர்கொண்டா என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full