யாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர்.! வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.!

0
664
Yashika-anand

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. 

தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ மஹத்துடன் ஒரு படம் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். மேலும், தற்போது இவரை பல லட்சம் பேர் சமுக வலைதளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே அம்மணி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருவதால் தான்.

சமீபத்தில் நடிகை யாஷிகா தனது உடல் பாகம் தெரிவது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். மேலும், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் உங்கள் ஊர் எது என்று கமன்ட் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு யாஷிகாவின் தங்கை ஒஷீன், நீ இருக்கும் அதே வீட்டில் இருந்து தான் வருகிறேன் என்று கூறியிருந்தார்.

இதனிடையே இன்ஸ்டாகிராம்வாசி ஒருவர், யாஷிகாவின் தங்கை ஓசினிடம், உங்கள் அக்காவிடம் இப்படி மார்பகத்தை காட்ட கூடாது என்று சொல்ல மாடீங்களா என்று மோசமாக கமன்ட் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஒஷீன், ஒரு பெண்ணின் உடல் பாகத்தை பற்றி எப்படி பேசுவது என்று உங்களுக்கு இங்கீதம் தெரியாதா. என் அக்காவை பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இதற்கு யாஷிகா ஆனந்தும் அந்த நபரை குறிப்பிட்டு உங்க அம்மா இதுபோன்ற காட்சிகளை பார்க்க கற்றுக்கொடுத்தாரா? இல்லை இல்ல அப்போ மூடிட்டு போ என்று மோசமாக அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.