தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட். இவர் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனர் ஆவார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. பின் இவர் பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் இவருக்கு என ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்து இருந்தார் ரிச்சர்ட். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் தான் ‘திரௌபதி’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஹீரோவாக ரிச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரிச்சர்ட். இதுதொடர்பான அறிவிப்பை ஏற்கனவே மோகன் ஜி அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரிச்சர்ட் பதிவிட்டு இருக்கும் இன்ஸ்டா பதிவு படு வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் நடிகர் ரிச்சர்ட் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் அந்த பெண் அவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ‘எதோ ஒரு இடத்தில் எங்களை சூரியன் முத்தமிட்ட போது’ என்று கேப்ஷனையும் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் என்று கூறி வந்தனர்.
அதே போல அந்த பெண் யாஷிகாவா என்று கமன்ட் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து யாஷிகாவுடன் எடுத்த இன்னோரு புகைப்படத்தை பதிவிட்டு ‘சூர்யன் முத்தமிட்ட’ பின்னர் என்று கேப்ஷன் போட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை யாஷிகாவும் தன்னுடைய இன்ஸ்ட்டா ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இவருவரும் காதலிக்கின்றனரா என்று எண்ண துடங்கிவிட்டனர்.
ஒருவேளை இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மையாக இருந்தால் யாஷிகா, அஜித் வீட்டின் மருமகளாக ஆகிவிடுவார். அதே போல யாஷிகா ஒரு தீவிர அஜித் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க யாஷிகா ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் மஹத்தை ஒருதலையாக காதலித்தார். அதே போல பிக் பாஸ் போட்டியாளரான நிரூப்பை கூட காதலித்து இருந்தார் ஆனால், அந்த காதலும் பிரேக் அப் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.