மற்ற நடிகைகள் பதில் சொல்லத் தயங்கும் கேள்வி.! லைவ் சாட்டில் பதிலளித்த யாஷிகா.!

By Rajkumar · 20/3/2019

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்திற்கு முன்னர் பல்வேறு படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் தான் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அதோடு மட்டும் நிற்காமல் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸில் பங்குபெற்ற யாஷிகா ஆனந்த், தனக்கான ஒரு தனிப்பட்ட ஆர்மியையும் உருவாக்கிக் கொண்டார். சொல்லப்போனால் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஓவியா எந்த அளவிற்கு பிரபலமடைந்தாரோ, அந்த அளவிற்கு யாஷிகா ஆனந்த் இரண்டாவது சீசனில் பிரபலமடைந்தார்.

இதையும் பாருங்க : 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது.! லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம்.! 

பிக் பாஸ் சீசன் முடிந்ததும் அதிக அளவில் படங்களில் கமிட்டாகி வருபவரும் இவர் தான். இதற்கு முக்கிய காரணமே இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் தான். இவ்வளவு ரசிகர்களை அனுஷ்கா வைத்திருக்க காரணமே அம்மணி அனைத்து விஷயத்திலும் ஓபனாக இருப்பதால் தான். இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை கூட சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

மேலும், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் லைவ் சாட்டும் செய்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் செய்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் இவரிடம் 'எப்படி உங்கள் எடையை பராமரிக்கிறீர்கள் ஏதாவது சிகிச்சை செய்தீர்களா' என்று கேட்க, அதற்கு யாஷிகா 'நான் 62 கிலோ இருக்கிறேன் என்னை பார்த்து நீங்கள் சர்ஜரி செய்து இருக்கீங்களா என்று கேட்கிறீர்களே' என்று சிரித்தபடியே பதில் அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full