ஆமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கு.! தைரியமாக சொன்ன பிரபல நடிகை

0
1715
Regina Actress
- Advertisement -

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணுங்க நான். தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறையப் படங்கள் பண்ணதுனால, பல பேர் என்னை ஆந்திரா பொண்ணுனு நினைக்கிறாங்க. நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!” என்கிறார், ரெஜினா கெஸன்ட்ரா. இந்த வருடம் தமிழ் சினிமாவில் இவரது நடித்து, ரிலிஸூக்காகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகம். தவிர, பாலிவுட் சினிமாவிலும் கால்பதிக்கப் போகும் ரெஜினாவிடம் பேசினேன்.

-விளம்பரம்-

actress regina

- Advertisement -

தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிப் படங்களிலும் நடிச்சிருக்கீங்க. சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக நினைக்கிறீங்களா?
“பாலியல் தொல்லை சினிமாவுல இருக்கு. அதுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன். நடிகைகள் லைம் லைட்ல இருக்கிறதுனாலதான், சினிமாவுல இருக்கிற பிரச்னைகள் வெளியே தெரியுது. சிலர் வாய்ப்புக்காக அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க. அந்தச் சூழலை நடிகைகளான நாமதான் தைரியமா ஃபேஸ் பண்ணனும். நடக்குற விஷயத்தை வெளியே சொல்லத் தயங்கக் கூடாது. அதை தைரியமா எதிர்க்கணும். வாய்ப்புக்காக எதையும் பண்ணனும்னு அவசியமில்லை!”

எக்கச்சக்க சினிமா பிரபலங்களுடன் இணைந்து ‘பார்ட்டி’ படத்துல நடிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது?”

-விளம்பரம்-

“வெங்கட்பிரபு சார் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘இந்தக் கேரக்டர்லதான் நான் நடிப்பேன்’னு அவர்கிட்ட கேட்டு வாங்கினேன். ‘பார்ட்டி’யில வித்தியசமான ரெஜினாவை நீங்க பார்க்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல்நாள் போகும்போது, என் லுக்கைப் பார்த்துட்டு பலருக்கும் அடையாளமே தெரியலை. ‘யாரு இந்தப் பொண்ணு’னு கேட்டாங்க. அப்படி ஒரு லுக்ல நான் நடிச்சிருக்கேன்.

regina

இந்தப் படத்துல நிறைய சீனியர் நடிகர், நடிகைகளுடன் நடிச்சது ஒரு வரம். ஒரே படத்துல இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம். அந்த வகையில், நான் ரொம்ப லக்கிதான். படத்துக்காக நிறைய டாட்டூஸ் போட்டு நடிச்சிருக்கேன். பிஜூ தீவுல ஷூட்டிங். ரொம்ப ஜாலியா, ஃபன்னா இருந்தது. ஏதோ பிக்னிக் போன மாதிரி ஒரு ஃபீல். முக்கியமா அங்கே தமிழ் பேசுற பல மக்களைப் பார்த்தேன், ரொம்ப சந்தோஷமா இருந்தது!”

Advertisement