ஆமா… நான் ரிலேசன்ஷிப்ல இருக்கேன் – ‘அழகிய தமிழ்மகள்’ சீரியல் சுபலட்சுமி !

0
2096
alagiya-tamil-magal-subalakshmi

அழகிய தமிழ்மகள்’ சீரியலில் வில்லியாக அனைவரையும் மிரளவைப்பவர் சுபலட்சுமி. கொடூரமான வில்லியாக மக்கள் மனத்தில் பதிந்தவர். ஆனால் திரைக்கு மாறாக இருக்கிறது அவருடைய மென்மையான பேச்சு.
subbulakshmi.
உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.
என் சொந்த ஊர் பாண்டிச்சேரி. நான், அப்பா, அம்மா, அக்கா. என் ஃபேமிலி எப்பவும் எனக்கு ஃபுல் சப்போர்ட். ரொம்பவே செல்லமான பொண்ணு நான். நடிக்கப் போறேன்னு சொன்னதும் ஆரம்பத்தில் லேசா தயங்கினாங்க. இப்போ, என் நடிப்பு விஷயத்தில் என்னைவிட ரொம்ப ஆர்வமா இருக்காங்க. வெளியூரில் ஷூட்டிங் இருந்தால், அப்பா அவருடைய வேலையை ஒதுக்கிட்டு வந்துடுவார்.

அழகிய தமிழ் மகள்’ சீரியலில் நெகட்டிவ் ரோல் பண்றது எப்படி இருக்கு?
டைரக்டர் சொன்னப்போ இவ்வளவு வில்லத்தனமா இருக்கும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. எனக்கு செட்டாகுமானு தயங்கினேன். இப்போ அந்த கேரக்டராகவே மாறிட்டேன்.இது ஒரு புது அனுபவமா இருக்கு. அதுமட்டுமல்லாம இந்த கேரக்டர் மூலமா என்னுடைய நடிப்புத் திறனை அதிகமா வெளிப்படுத்த முடியுது
subbulakshmi.
ரிலேசன்ஷிப்ல இருக்கீங்களா?
ஆமா! நான் ரிலேசன்ஷிப்லதான் இருக்கேன். அவர் ஒரு மாடல். மாடலிங் பண்ணும்போதுதான் முதலில் பார்த்தேன். ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தோம். ஒரு கட்டத்துல காதல் மலர்ந்துச்சு. அவர் தான் என் வழிகாட்டி. எப்போதும் என்னை ஊக்கப்படுத்திட்டே இருப்பார். எல்லார்கிட்டேயும் அன்பா பழகுவார். சீக்கிரமே எங்க கல்யாணத்துக்கு கூப்பிடறேன்.

நடிப்பை தவிர வேற என்ன பண்ணுவீங்க?
சின்ன வயசிலிருந்து பாட்டு பாடறது அவ்வளவு பிடிக்கும். வீட்டுல எப்பவும் பாடிட்டே இருப்பேன். பெரிய பாடகியாகப் போறேன்னு சொல்லிட்டு திரிஞ்சேன். காலேஜ்ல எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் என் பாட்டு இல்லாமல் முடியாது. ஆனால், நடிக்க வந்ததும் அப்படியே விட்டுட்டேன்.
subbulakshmi.
எதிர்கால திட்டம்.
சின்னத்திரையில் தொடர்ந்து நடிப்பேன். வெள்ளித்திரையில் பேசும் கதாபாத்திரமா அமைந்தால், நிச்சயம் நடிப்பேன்.