500 கால், குடும்பத்தினருக்கு கற்பழிப்பு மிரட்டல் - யோகி ஆதித்யநாத் பற்றி சர்ச்சை டிவீட்டால் சித்தார்த்தை மிரட்டும் பா ஜ கவினர்.

By Rajkumar · 29/4/2021

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/Actor_Siddharth/status/1387038150283776003

இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறை குறித்து பேசிய நீதிபதி ஒருவர், மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று.இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்," என்று கூறினர்.

இதையும் பாருங்க : விவேக் தடுப்பூ சர்ச்சை - ஜாமீன் கேட்ட மன்சூர் அலிகானிடம் தடுப்பூசி வாங்கி கொடுக்க சொன்ன நீதிமன்றம் (அதுவும் எத்தனை லட்சத்திற்கு தெரியுமா)

அதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது. அம்மாநிலத்தில் ஏராளமானோர் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதது உள்ளிட்டவைகளால் உயிரிழந்து வருகின்றனர்.இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தவறான தகவல்களை தரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1387653507814072325

இப்படி ஒரு நிலையில் பொய் சொன்னால் அறை விழும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நடிகர் சித்தார்த் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர், சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவால் பா ஜ கவினர் சித்தார்த்தை திட்டி தீர்த்து வருகின்றனர.

https://twitter.com/Actor_Siddharth/status/1387657671826837505

இந்த நிலையில், தனது தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் பரப்பி வருகின்றனர் என்று நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்கள் என 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 அழைப்புகளுக்கு மேல் வந்துவிட்டது. தமிழக பாஜகவின் ஐ.டி. பிரிவு, என்னுடைய தொலைபேசி எண்ணை வெளியிட்டதால் இந்த அழைப்புகள் வந்துள்ளன. என்னவானாலும், நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full