விவேக் தடுப்பூ சர்ச்சை – ஜாமீன் கேட்ட மன்சூர் அலிகானிடம் தடுப்பூசி வாங்கி கொடுக்க சொன்ன நீதிமன்றம் (அதுவும் எத்தனை லட்சத்திற்கு தெரியுமா)

0
1122
mansoor
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலமானார். விவேக் மருத்துவமனையில் அனுமப்திப்பட்ட போது மருத்துவமனை சென்ற நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கிற்கு ஏன் தடுப்பூசி போடீங்க என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘தடுப்பூசிதான் அவரது இன்றைய நிலைக்குக் காரணம். அவருக்கு மட்டும் ஏதாவது ஆனால் சும்மா இருக்க மாட்டேன்” என்று பேட்டி அளித்தார். தொடர்ந்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்தியாவில் கரோனாவே இல்லை, எதற்காக முகக்கவசம் அணிகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். சுகாதாரத் துறைச் செயலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

-விளம்பரம்-

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் மைசூர் அலிகான் மீது சென்னை மாநகராட்சி சார்பில் 10-வது மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் அவர் மீது நடவடிக்கை கோரி அளித்த புகாரின் பேரில், IPC 153 (கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல்), 270 (தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல்), 505(1),(b) (சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல்), தொற்றுநோய் தடுப்புச் சட்டம் (Section 3 of Epidemic Deceased Act – 1897), பேரிடர் மேலாண்மைச் சட்டம் (Section 54 of the Disaster Management t Act – 2005) குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : 46 வயதிலும் இப்படி ஒரு உடையில் யோகா சனம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை.

- Advertisement -

இதனிடையே காவல்துறை வழக்குப் பதிவு செய்தால் தாம் கைது செய்யப்படுவோம் என அஞ்சி, மன்சூர் அலிகான் நேற்றே முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. மன்சூர் அலிகான் அளித்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கினார்.”கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களின் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

TN Actor Mansoor Ali Khan Arrested For Threatening To Assault Officials If  Salem-Chennai Expressway Is

தடுப்பூசி குறித்து புரளி பரப்பக் கூடாது. பதற்ற நிலையை உருவாக்கக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று அறிவுறுத்திய நீதிபதி, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அபராதத் தொகையை தடுப்பூசி வாங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பெயரில் வரைவோலையாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement