பிக் பாஸில் யோகி பாபு.! கூடவே இந்த நடிகையுமா.! செம சூப்பர் போங்க.!

0
3207
yogi-babu
- Advertisement -

இந்திய சினிமாத்துறையில் வெளிவரும் பிரபலங்களின் படங்களுக்கு நிகராக வெற்றி கொடுத்து வரும் தொலைக்காட்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது சுவாரசியமாகவும் பல எதிர்பார்ப்புகளுடன் நடந்து கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் என்றாலே 100 நாட்கள்,60 கேமராக்கள் என்றுதான் மக்கள் மனதில் தோன்றும். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். இந்தியாவில் பேசப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சியில் மக்களின் மனதை கவர்ந்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் தமிழில் சில வாரங்களில் முடிவடைய போகிறது.

-விளம்பரம்-
Image result for yogi babu


இந்த பிக்பாஸ் டைட்டிலை கொண்டு தமிழ் திரைப்பட குழுவினர் படம் ஒன்று எடுக்க முடிவு செய்துள்ளனர்.அதில் யோகி பாபு, அஞ்சலி மற்றும் பல நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்ற தகவலும் வெளிவந்தன. பிக்பாஸ் வீட்டிற்கு அஞ்சலியும் ,யோகிபாபுவும் போகிறார்களா என்று பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வண்ணம் உள்ளன. அதற்கு பதில் கொடுக்கும் வகையில் இந்த படத்தின் இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருந்தார்.அது பிக்பாஸ் வீட்டிற்கு அஞ்சலி,யோகி பாபு யாரும் செல்லவில்லை.மேலும் புதியதாக வர போகும் அதாவது புது படம் ஒன்று தயாரிக்க உள்ளனர் திரைபடக்குழுவினர்.அந்த படத்திற்கு தான் “பிக்பாஸ்” என்ற டைட்டில் வைக்க முடிவு செய்துஉள்ளார்கள்.மேலும் இந்த பிக்பாஸ் படத்தில் அஞ்சலி ,யோகிபாபு ஆகிய 2 பேரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியது, பிக்பாஸ் என்ற தலைப்பில் படம் தயாரிப்பதாகவும் மேலும் இந்த தலைப்பை அதிகாரப்பூர்வமாக எங்களது என்று மாற்றி விடுவோம் என்று கூறினார். மேலும் இந்த பிக்பாஸ் படம் ஒரு ட்ரெண்டிங்கான நகைச்சுவை படமாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த படத்தில் அஞ்சலி யோகிபாபு தவிர ராமர், சுப்பு பஞ்சு, நிரோஷா போன்ற பல பிரபல நடிகர்களும் நடிக்க உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொண்ட ரேஷ்மாவும் நடிக்க உள்ளார்.
இந்த பிக்பாஸ் படத்தை குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியது , நான் பிக்பாஸ் படத்தின் கதையை கேட்டேன்.கதை மிக அருமையாகவும்,இதுவரை பார்க்காத அளவு நகைச்சுவையுடனும் இருக்கும் என்று கூறினார்.மேலும் எனக்கு நடிக்க விருப்பமாக உள்ளதும் என்றும் நான் நடிக்கிறேன் என்றும் இணையங்களுக்கு தெரிவித்தார் . இந்த படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன் என்று கூறினார். மேலும் பிக்பாஸ் படத்தில் யோகிபாபுவின் காதலியாக அஞ்சலி நடிக்கிறார். இதற்காக யோகாவிற்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது அதனால்தான் நயன்தாரா, அஞ்சலி போன்ற முன்னணி நடிகைகள் உடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

- Advertisement -
Image result for yogi babu in bigg boss


அதிலும் ஒருசில பேர் பன்னி மூஞ்சி வாயா டயலாக் ஹீரோவுக்கு அடித்தது ஜாக்பாட் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த புதிதாக வெளிவர இருக்கும் பிக்பாஸ் திரைப்படத்தை குறித்து வேறு எந்த தகவலும் தயாரிப்பாளர் கூறவில்லை விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியிடுவோம் என்று கூறினார். ரசிகர்களும் பிக் பாஸ் வீட்டில் இருப்பது போல சண்டை ,காதல் போல இருக்குமா அல்லது கதை வேறு மாதிரி இருக்குமா என்ற ஆர்வத்தில் உள்ளார்கள்.

Advertisement