இதை யாரும் நம்பாதீங்க, அதெல்லாம் வதந்தி. புலம்பி தள்ளும் யோகி பாபு

0
9831
Yogi-Babu
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர்களான வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பின்னர் இன்றைய தலைமுறையின் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருவது யோகிபாபு தான். காமெடியனாக மட்டுமல்லாமல் படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார் நடிகர் யோகிபாபு.

-விளம்பரம்-

தர்மபிரபு, ஜாம்பி போன்ற படங்களில் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், தமிழில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களில் படத்தில் காமெடியனாக நடித்து வரும் யோகி பாபு இருக்கு இந்த ஆண்டு மட்டும் 19 படங்கள் கைவசம் உள்ளது. அதே போல ஒரு நாளைக்கு நடிகர் யோகிபாபு 5 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.இப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வரும் யோகி பாபுவிற்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி கடந்த இரண்டு நாளாக வைரலாக பரவி வந்தது.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் யோகி பாபு என்ற ஹெலோ வலைதள பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று பதிவிடபட்டிருந்தது. மேலும், அந்த புகைப்படத்தில் அவளும் நானும் என்றும் குறிப்பிட்டுஇருந்தது. இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இவங்க தான் உங்கள் வருங்கால மனைவியா என்று கமன்ட்களை செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அதற்கு யோகி பாபு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. பின்னர் தான் தெரிந்தது அது யோகி பாபு பெயரில் இயங்கி வரும் போலி கணக்கு என்று தெரியவந்தது.

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு தனது திருமணம் குறித்து வந்த தகவல் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இதனால் யோகி பாபுவின் திருமணம் குறித்து வெளியான தகவல் வெறும் வதந்தி என்று உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement