'கட்டுனா அந்தப் பொண்ண தான் கட்டுவேன்' - விருது விழா மேடையில் கூறிய யோகி பாபு. வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 9/1/2020

தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகி பாபு திகழ்கிறார். நடிகர் யோகிபாபு அவர்கள் ரெமோ, மான் கராத்தே, காக்கி சட்டை, யாமிருக்க பயமே,
வேதாளம், சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். காமெடி நடிகராக யோகி பாபு தற்போது அடுத்தடுத்து படங்களில் கலக்க காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த தளபதி விஜயின் மெர்சல் படத்தில்லும் நடித்திருந்தார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு இவர் காமெடி கிங்காக திகழ்ந்து வருகிறார்.

https://twitter.com/ZeeTamil/status/1214758626763497472

தற்போது நடிகர் யோகி பாபு அவர்கள் ரஜினிகாந்த், விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் நடிகர் யோகி பாபு அவர்களின் காமெடி வேற லெவல். இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சினிமா பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா கோலாகலமாக நடை பெற்றது. இது ஜீ தமிழ் நிறுவனம் முதன் முறையாக நடத்திய விருது வழங்கும் விழா ஆகும். இந்த விழா சென்னையில் பிரம்மாண்டமான அளவில் நடை பெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், விஜய் சேதுபதி, தனுஷ், நயன்தாரா, சமந்தா, ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : என்னிடம் கூட இந்த புகைப்படம் இல்லை. தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரசிகரின் செயலால் மனம் நெகிழிந்த குஷ்பூ.

இந்த விருது விழாவில் 2019 ஆம் ஆண்டின் வெளியான சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் நடிகர் ஜெயம் ரவி அவர்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் "கோமாளி". இந்த படத்தில் நடிகர் யோகி பாபுவின் நடிப்பு பாராட்டக் கூடிய வகையில் இருந்தது. இந்த படத்தில் இவருடைய நடிப்பிற்காக சிறந்த காமெடி நடிகர் என்ற விருதை ஜீ தமிழ் நிறுவனம் நடிகர் யோகிபாபுக்கு வழங்கியது. இந்த விருதை பெற யோகி பாபு மேடைக்குச் சென்றார். பின் விருதை பெற்ற யோகி பாபுவிடம் திருமணம் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேள்வி கேட்டார்.

அதற்கு அவர் கூறியது, "பொண்ணுங்களை எல்லாம் நான் பாக்குறேன். ஆனா, பொண்ணு தான் என்ன பார்க்க மாட்டேங்குது" என்று நகைச்சுவையாக கூறினார். உடனே கோலமாவு கோகிலா படத்தின் வசனத்தை பேசி காட்டும் படி நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறினார். அதுவும் நயன்தாரா கூட உங்கள் எதிரே தான் உட்கார்ந்து இருக்கிறார் என்றும் கூறினார்கள். அதற்கு யோகி பாபு கூறியதும், "கட்டுனா அந்தப் பொண்ண தான் கட்டுவேன். அந்த பொண்ணு யாரு தெரியுமா? நீங்க தான்" என்று யோகி பாபு கூறினார். இதை பார்த்து நயன்தாரா அவர்கள் வெட்கத்துடன் சிரித்து மகிழ்ந்தார். மேடையிலேயே க்யூட்டாக நயன்தாராவிற்கு யோகி பாபு அவர்கள் ப்ரொபோஸ் பண்ணி உள்ளார். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full