என்னிடம் கூட இந்த புகைப்படம் இல்லை. தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரசிகரின் செயலால் மனம் நெகிழிந்த குஷ்பூ.

0
89990
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் இருந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் 1990களில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். அதோடு 80 கால கட்டங்களில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக திகழ்ந்தவர். நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் நடிகை குஷ்பூ அவர்கள் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த்,சரத்க்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முதலில் இவர் திமுக கட்சியில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பு அவர்கள் சினிமா உலகில் பிரபலமான இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : இரவு 12 மணிக்கு மேல் நடு ரோட்டிலேயே பஸ்ட் நைட் சீன் – ரகசியம் சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.

- Advertisement -

நடிகை குஷ்பு அவர்கள் தற்போது வெள்ளித்திரை படங்களில் குணசித்திர வேடங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், தற்போது கூட இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பூ தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், அதனை குஷ்பூவிற்கு டேக்கும் செய்திருந்தார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த இந்த அற்புதமான புகைப்படத்திற்கு மிக்க நன்றி என்னிடம் கூட இந்த புகைப்படம் இல்லை என்று கமெண்ட் செய்துள்ளார் குஷ்பு. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அவரது தாயை போல தான் குஷ்பூ இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று அவன் களை அள்ளி வீசி வருகிறார்கள்.

Advertisement