யோகி பாபு மகனின் பெயர் சூட்டு விழா - முருகப்பெருமானின் பெயரை வைத்துள்ள யோகி பாபு. என்ன பெயர்னு பாருங்க.

By Rajkumar · 23/7/2021

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் எப்போ?எப்போ? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் வந்து இருந்தது. தற்போது ஒரு வழியாக நடிகர் யோகி பாபு அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : 'நாங்கள் ஒன்றாக எடுத்த முதல் செல்பி' சூரியா பிறந்தநாளில் கார்த்தி வெளியிட்ட புகைப்படம்.

யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யோகி பாபுவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே இரு மாநில எல்லையில் அமைந்துள்ள  ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார் யோகி பாபு.

இப்படி ஒரு நிலையில் இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தனது மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடாத்தியுள்ளார் யோகி பாபு. மேலும், தனது மகனுக்கு 'விசாகன்' என்று பெயர் வைத்துள்ளார். விசாகன் என்பது தமிழ் கடவுள் முருகனின் பெயர்களுள் ஒன்று. மேலும், நடிகர் யோகி பாபு , முருக கடுவுளின் தீவிர பக்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full