‘நாங்கள் ஒன்றாக எடுத்த முதல் செல்பி’ சூரியா பிறந்தநாளில் கார்த்தி வெளியிட்ட புகைப்படம்.

0
1214
surya
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சூர்யா இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பல்வேரு பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் அவரின் தம்பியும் நடிகருமான கார்த்தி, சூர்யாவுடன் எடுத்த முதல் செல்பி புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களின் சகோதரர்கள் நடிகர்களாக வளம் வந்தாலும் ஒரு சில சகோதரர்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.

-விளம்பரம்-

அதில் கார்த்தியும் ஒருவர் தான். 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘பருத்தி வீரன்’. இது தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமாக இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் ஒரு இயக்குனராக வர வேண்டும் என்று தான் மணிரத்னத்தின் உதவியாளராக சேர்ந்தார்.

இதையும் பாருங்க : இரண்டாம் குழந்தை பிறந்துள்ளதை குயூட் புகைப்படத்துடன் வெளியிட்ட சாண்டி (என்ன குழந்தை தெரியுமா)

- Advertisement -

மேலும், மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் நடிப்பில் வெளியான ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்தி, அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் கூட நடித்தும் இருந்தார். பின்னர் தான் இவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு வந்து தற்போது சூர்யா அளவிற்கு ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

கார்த்தி எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் தனது அண்ணன் சூர்யா பற்றி சொல்லாமல் இருந்தது இல்லை. இப்படி ஒரு நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கார்த்தி , சூர்யாவுடன் பாரிஸ் டவருக்கு முன்னாள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இது தான் நாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட முதல் செல்பி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement