கலைஞர் உடல்நிலை வைத்து காமெடி செய்த யோகி பாபு.! புகைப்படம் உள்ளே

0
267
Kalaingar

திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள் உடல் நல குறைவு காரணத்தால் சென்னை காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியில் பிரமுகர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

Yogi Babu

சமீபத்தில் அதிமுக கட்சியின் பிரமுகர்கள் சிலர் கருணாநிதி அவர்களை நேரில் சென்று சந்தித்த பின்னர் சேத்தியாளர்களை சந்தித்து,கலைஞர் அவர்கள் நலமாக உள்ளார் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கலைஞரை சந்தித்த அதிமுக ஒபிஎஸ், தங்கமணி, வேலுமணி ஆகியோரை கலாய்த்து காமெடி நடிகர் யோகி பாபு ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

இவர் பதிவிட்டுள்ள இந்த பதிவின் மூலம் அதிமுக பிரமுகர்களை கலாய்த்துள்ளது தெளிவாக தெரிகிறது. எனவே,ஒரு ட்விட்டர் வாசிகள் நடிகர் யோகி பாபுவை திமுக-வின் ஆதாரவாளரா என்று ட்விட்டரில் வினாவி வருகின்றனர். மேலும்,மற்றுமொரு பதிவில் கலைஞர் ஐயா, விரைவில் தேறி வர வேண்டும் என்று பிராத்திப்பதாகவும் யோகி பாபு பதிவிட்டிள்ளார்.

Yogi-babu

காமெடி நடிகரான யோகி பாபு பல்வேறு தமிழ் திரைபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா, நடிகை திரிஷாவின் மோகினி ‘ ஆகிய இரண்டு படங்களில் காமெடியனாக நடித்து கலக்கியுள்ள இவர், விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்திலும் காமெடியனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.