நடிகர் யோகி பாபுவில் கார் விபத்தில் சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் யோகிபாபுவின் கார் விபத்தில் சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூருக்கு சூட்டிங்கிற்காக யோகி பாபு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேலூர் அருகே வாலாஜாபேட்டையின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக யோகி பாபுவின் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள டிவைடரில் மோதி இருக்கிறது. இந்த காரில் நடிகர் யோகிபாபு உடன் சில பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.
யோகி பாபு கார் விபத்து:
நல்லபடியாக இந்த விபத்தில் யோகி பாபு மற்றும் அவருடன் பயணம் செய்தவர்கள் யாருக்குமே காயம் ஏற்படவில்லை. இதை அடுத்து வேறொரு காரை வரவைத்து அங்கிருந்து யோகி பாபு பெங்களூரு கிளம்பி சென்றிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.
https://www.youtube.com/watch?v=LbS9XpStyMY
விபத்தில் நடந்தது:
அதற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்து இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களின் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதல் இடத்தில் இருக்கும். இவர் ரஜினி, அஜித், விஜய் என பல தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
யோகிபாபு குறித்த தகவல்:
ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளைப் பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

யோகி பாபு திரைப்பயணம்:
சமீபத்தில் யோகி பாபு இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், யோகி பாபு அவர்கள் வானவன், ஜோரா கைய தட்டுங்க போமற்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். தற்போது இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் காமெடி ரோலிலும் கலக்கி வருகிறார். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.






