'தல பைக் ஓட்டுவதில் அவர் மாஸ், அவர ஊரே ஒட்டுறதுல அவர் தமாஷ் - இப்படி சொன்னவர் தற்போது மாஸ்டர் படத்தில்.
தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பிரபலமானவர்கள் என்று சொன்னால் தல அஜித்தும், தளபதி விஜய்யும். அந்த அளவிற்கு அவர்களுக்கு ரசிகர்கள் உள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அது எல்லாருக்குமே தெரியும். தமிழ்நாட்டில் எந்த இடத்திற்குச் சென்றாலும் ‘தல, தளபதி’ ரசிகர்களை பார்த்து விடலாம். ஏன்னா, அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் ‘தல, தளபதி’ ரசிகர்கள் உள்ளனர். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.
https://twitter.com/MrRathna/status/1179769008100261888
ஆரம்ப காலத்திலிருந்தே இப்போது வரை அஜித்–விஜய் ரசிகர்கள் மாற்றி மாற்றி திட்டிக் கொள்வது வழக்கமான ஒன்று. உண்மையாகப் பார்த்தால் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ கிடையாது. அவர்கள் பெயரை சொல்லி ரசிகர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் விடுகிறது. இந்நிலையில் இயக்குனர் ரத்தினகுமார் அவர்கள் சில வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் தல அஜித் குறித்து போட்ட டீவ்ட் தற்போது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் பாருங்க : விஜய்யின் 65வது படத்தை இயக்கப்போவது இவங்கள, வெளியான தகவல்.
'மேயாத மான், ஆடை' போன்ற படங்களை தயாரித்தவர் இயக்குனர் ரத்தினகுமார். இவர் தற்போது நடிகர் விஜயின் 64 வது படமான மாஸ்டர் படத்தில் உரையாடல் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்தினகுமார் இருவரும் நல்ல நண்பர்கள். இது அவர்களின் உரையாடல் மூலம் தெளிவாக தெரிகிறது. பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் ரத்தினகுமார் பணி புரிகிறார் என்பதை அவரே ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரா மாறி விட்டார் என்று கூறப்படுகிறது. இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆக மாறுவதற்கு முன்னர் தல அஜித் குறித்து டுவிட்டரில் விமர்சித்து பதிவிட்டு உள்ளார்.
https://twitter.com/vineethians/status/1221754649369120770
அது என்னவென்றால் 'தல பைக் ஓட்டுவதில் அவர் மாஸ், அவர ஊரே ஒட்டுறதுல தமாஷ். ஏற்கனவே உடம்புல ஏழு எட்டு தையல், இதுல உனக்கு எதுக்கு ஸ்டைல் என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த ட்வீட்களை எல்லாம் ரத்னகுமார் டெலீட் செய்து விட்டார். தற்போது இந்த ட்விட்டர் எப்படியோ சமூக வலைத்தளங்களில் மீண்டும் வந்துள்ளது. இதைப் பார்த்து தல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் பயங்கர கடுப்பாகி விஜய் குறித்தும், ரத்னகுமார் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்.