தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யின் 64வது படமான “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிவரும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும், மாஸ்டர் படம் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து கொண்டு வருகின்றனர்.
இதையும் பாருங்க : என்னை தவிர யாரும் அப்படி நடிச்சிருக்க மாட்டாங்க. பூரித்து போய் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோ இதோ.
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வருகின்றனர். இது சோஷியல் மீடியாவில் முக்கிய கேள்வியாகவே மாறி விட்டது. வெற்றிமாறன் அவர்கள் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால், அவர் சூர்யாவின் 40வது படத்தை இயக்கப் போகிறார் என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பின்னர் மகிழ்திருமேனி, லோகேஷ் கனகராஜ், அட்லி, கார்த்திக், தங்கவேல் என பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால், இது தொடர்பாக எந்த இயக்குனர்களும் உறுதியான தகவலை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கி உள்ள பிரபல இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் நடிகர் விஜய்யை வைத்து 65 வது படத்தை இயக்குகிறார் என்று வெளியாகி உள்ளது. மேலும், இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் நடிகர் விஜயிடம் தரமான கதை ஒன்றை கூறி உள்ளார். அந்த கதை பிடித்துப் போனதால் அடுத்த கட்ட ஆலோசனை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்றும் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ரசிகர்கள் ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் மீது பயங்கர எதிர்பார்ப்புகளுடன் உள்ள போது தற்போது விஜய் – சுதா கொங்கரா கூட்டணி குறித்த தகவல்கள் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தி உள்ளது. ஆனால், விஜய்யின் 65 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது உறுதியானது. மேலும், சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் விஜய்யின் மாஸ்டர் படமும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.