கடந்த ஆண்டு நிட்சயத்தோடு நின்று போன திருமணம் – தற்போது திருமணத்தை முடித்துள்ள இர்ஃபான். பெண் யார் தெரியுமா ?

0
1650
- Advertisement -

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார். மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகள் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி உணவுகளை விமர்சித்து வந்த இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின் உடனே இர்பான் இதற்கு விளக்கம் கொடுத்து பதிவு போட்டு இருந்தார். ஆனால் நிட்சயதார்தம் முடிந்த நிலையில் தனது திருமணம் நின்று இருபதாக கூறி இருந்தார்.

- Advertisement -

இர்பான் நிச்சயதார்த்தம் பற்றிய தகவல்:

இதுகுறித்து விளக்கமளித்த அவர் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததைத் தொடர்ந்து எல்லோரும் என்னுடைய திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். தினமும் அதை குறித்து ஏதாவது ஒரு கேள்வியை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. என் மீது அக்கறை கொண்டு இப்படி கேட்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளி வைக்கவில்லை, நின்றுவிட்டது. ஏனென்றால், என்னுடைய எண்ணத்திற்கும் அவங்களுடைய எண்ணங்களும் சரியாக பொருந்தவில்லை.

விளக்கம் கொடுத்த இர்பான்:

நான் எல்லாம் சரியாக பொருந்தனும் என்று சொல்லவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எனக்கு மனதில் ஏதோ வேண்டாம் என்று தோன்றியது. இதை பற்றி எங்கள் வீட்டில் சொன்னவுடன் முதலில் வீட்டை ஒத்துக் கொள்ளவில்லை. பின் எங்கள் வீட்டில் கை காலில் விழாத குறையாக பேசி பிறகு தான் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

-விளம்பரம்-

மீண்டும் திருமணம் :

பின் பெண் வீட்டிலும் என்னுடைய சூழ்நிலை எடுத்து சொன்னேன். அவர்களும் புரிந்து கொண்டு சரி என்று சொல்லிவிட்டார்கள். என்னுடைய ரசிகர்களுக்கும் இதை சொல்லனும் என்று தான் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறேன். என்னுடைய திருமணம் நின்றுவிட்டது தள்ளிப் போக வில்லை. தயவு செய்து இனிமேல் திருமணம் பற்றி கேட்காதீர்கள். வேறு ஏதாவது ஜாலியாக பேசலாம் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இர்பானுக்கு மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement