இந்தியாவின் முதல் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்சன் மூவி குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சினிமாவில் சிங்கிள் ஷாட் திரைப்படத்துக்கான முயற்சிகள் 1970களில் மேற்கொள்ளப்பட்ட. இது இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்த முயற்சி மேற்கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் 2015 இல் வெளியான ஜெர்மன் திரைப்படமான விக்டோரியா சிங்கிள் ஷாட் திரைப்படமாக வெளியாகி இருந்தது.

அதனை அடுத்து பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் முதல் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்சன் படம் என்று யுத்த காண்டம் படத்தை அறிவித்துள்ளனர். இதில் நடிகர்கள் உட்பட 100 தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் இந்த படம் தயராகி உள்ளது. இந்த படத்தை குமரன் என்பவர் இயக்கி இருக்கிறார். பாரடைஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Advertisement

ஶ்ரீராம் கார்த்தி அளித்த பேட்டி:

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு பல விருதுகளை வாங்கியிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனான ஶ்ரீராம் கார்த்தியிடம் இது குறித்து பேட்டி எடுக்கப் பட்ட போது அதில் அவர் கூறியிருந்தது, இது ஒரு த்ரில்லர் படம். பார்வையாளர்கள் கதையை விட்டு நகராமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சிங்கிள் ஷாட் படத்தை எடுக்க முடிவு செய்தோம்.

யுத்த காண்டம் படம் குறித்த தகவல்:

ஒரு சம்பவத்தை அதன் அருகில் இருந்து பார்ப்பது போல உணர்வை இந்தப்படம் ஏற்படுத்தும். ஒரு ஆக்ஷன் படத்தை சிங்கில் சாட்டில் எடுத்திருக்கிறோம். இரவின் நிழல் ஒரு நான் லீனியர் படம். ஆனால், இது அப்படி இல்லை. ஒரு நான் லீனியர் படத்தை எந்த கட்டும் பண்ணாமல் அப்படியே எடுத்திருக்கோம். இதற்கு முன்னாடி தமிழில் சிங்கிள் ஷாட் மூவியில் அகடம் என்ற ஒரு படம் வந்திருந்தது. ஆனால், அவர்கள் ஒரே இடத்தில் சூட் பண்ணி இருப்பார்கள்.

Advertisement

படப்பிடிப்பு குறித்து கூறியது:

ஆனால், இந்த படம் வேற வேற லொகேஷனில் எடுத்து. சென்னையில் ஐந்து இடங்களில் இந்த படத்தோட படப்பிடிப்பு நடந்தது. 5 லொகேஷன்களில் ஒரு சீன் எடுப்பது எங்களுக்கு ரொம்ப சவாலாக இருந்தது. இந்த படத்தை எடுக்க ரொம்ப சிரமப்பட்டு இருக்கோம். இந்தியாவில் இதற்கு முன்னாடி ப்ராப்பர் சிங்கிள் ஷாட் என்று 2 படங்கள் வந்திருக்கு. ஆனால், அதை கமர்சியல் திரைப்படங்கள் என்று சொல்ல முடியாது.

Advertisement

படத்தில் நடித்த நடிகர்கள்:

அது ஆர்ட் ஃபிலிம் போலத்தான் இருந்தது. இது பக்கா கமர்சியல் த்ரில்லரான படம். தைரியமாக இதை நாங்கள் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் என்று சொல்லியிருக்கிறோம். அதோடு நான் கன்னிமாடம் படத்தில் நடித்து இருந்தேன். இது என்னுடைய இரண்டாவது படம். இந்த படத்தில் கோலிசோடா 2 கிருஷ் குருப், யோக்ஜேபி, சுரேஷ்மேனன், போஸ் வெங்கட் என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். பல விழாக்களுக்கு இந்த படத்தை அனுப்பி விருதுகளையும் வாங்கி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement