90’ஸ் கால கட்டம் முதல் இன்று வரை இளையராஜாவின் இசை தான் சங்கீத பிரியர்களை தாலாட்டி தூங்க வைத்து வருகிறது. குத்து பாட்டானாலும் சரி மனதை வருடும் மெலடியாக இசை ஞானி இளையராஜா பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அவரது கலையை பாராட்டி அவருக்கு சமீபத்தில் விழா ஒன்றும் நடத்தப்பட்டது.

இசை ஞானியின் மெலடி பாடல்களில் நாசர் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ‘அவதாரம்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும் போது’ என்ற பாடலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்த பாடல் பலரால் விம்ரும்பபட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில்
இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா சாதனைகள் குறித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, என்னுடைய கூற்று தவறில்லையென்றால், அவரதாரம் படத்தில் இடம் பெற்ற தென்றல் வந்து தீண்டும் போது பாடலுக்கு ஆர்கெஸ்ட்ரா செய்தது எங்களுடைய மூத்த அண்ணன் கார்த்திக் ராஜா என நினைக்கிறேன் என்றார்.

மேலும், இளையராஜாவின் இளைய மகன் யுவனிடமும் இந்த விடயத்தை கேட்டு உறுதி செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த டீவீட்டுக்கு பதிலத்த யுவன்,  உறுதியாக தெரியவில்லை. அப்பாவை தான் கேட்க வேண்டும். ஆனால் நானும் அப்படித் தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement