80களில் வெளிநாட்டில் படு ஸ்டைலிஷ் உடையில் இளையராஜா, யுவன் பகிர்ந்த அறிய புகைப்படம்.

0
790
llai
- Advertisement -

சினிமா திரையுலகில் இசைஞானி இளையராஜாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும் அந்த அளவிற்கு இசையில் சிறந்து விளங்கியவர். இவர் இசைத்துறையில் பண்ணாத சாதனைகளே இல்லை. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் கலை பயணத்தை பாராட்டி பிரம்மாண்ட விழா ஒன்று கூட நடத்தப்பட்டது. அதே போல இளையராஜா கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில், சிக்கல்களில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் இசைத்துறையின் ஜாம்பவானாக விளங்கிய இளையராஜாவின் இசை கோவிலாக இருந்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா வெளியேற்றப் பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இளையராஜா அவர்கள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை பயணத்தை நடத்தி வருகிறார். மேலும், ரஜினிகாந்த்,கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய் என்று சினிமா துறையில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசை அமைத்தவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய பாடல்கள் எல்லாம் தற்போது உள்ள இளைஞர்கள் மனதையும் கவர்ந்த பாடல்கள் ஆகும். இப்படி புகழ் பெற்ற பாடல்களை உருவாக்கிய இசை கோவில் “பிரசாத் ஸ்டூடியோ”.

- Advertisement -

இந்தநிலையில், பிரசாத் ஸ்டூடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இடத்தைக் காலி செய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படி ஒரு நிலையில்  தனியாக ஸ்டுடியோ உருவாக்குவதற்காக கோடம்பாக்கத்தில் இருந்த எம்.எம். திரையரங்க வளாகத்தை விலைக்கு வாங்கிய இளையராஜா கடந்த பிப்ரவரி 3 இளையராஜா தனது இசையமைப்புப் பணிகளை புதிய ஸ்டுடியோவில் தொடங்கினார்.

இளையராஜா என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது அவரது வெள்ளை உடை தான். அதிலும் எங்கு சென்றாலும் ஒரு வெள்ளை வேஷ்டி, வெள்ளை ஜிப்பா என்று மிகவும் சிம்பிளாக தான் நாம் இளையராஜாவை பார்த்திருப்போம். ஆனால், கலர் கோட், பேன்ட் கேப் என ஸ்டைலான உடையில் போஸ் கொடுத்து இளையராஜா எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம இசைஞானியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement