தமிழில் தான் பிக் பாஸ் சீசன் 1, ஆனால் ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 11 ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை ஹிந்தி நடிகர் சல்லு பாய் சல்மான் கான் ஹோஸ்ட் செய்து நடத்தி வருகிறார். அக்டோபர் 1 ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. இந்த சீசன் கலர்ஸ் டீவில் தினமும் இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை ஒளிபரப்பபடுகிறது.
18 பேரும் கிட்டத்தட்ட இந்தி திரையுளகிற்கு சம்ந்தப்பட்டவளாகவே இருக்கின்றனர். வழக்கம் போல் முதல் வார முடிவில் ஒருவரை வெளியேற்ற எவிக்சன் ப்ராசஸ் நடத்தப்பட்டு ‘ஜுபெய்ர் கான்’ வெளியேற்றப்பட்டார்.

தற்போது இவர் தான் ஹோஸ்ட் சல்மான் கான் மீது புகார் செய்துள்ளார். அதாவது சல்மான் கான் என் மீது பாகுபாடு காட்டி நடந்து கொண்டார் எனவும் புகார் செய்தார்.

Advertisement

அதற்கு முன் ஜுபெய்ர் கான் என்ன பிக் பாஸ் வீட்டில் என்ன செய்தார் என்று கூற வேண்டும். வீட்டில் இருந்து அக்டோபர் 9ஆம் தேதி வெளியேற்றப்பட்டார். அதற்கு முன் 9 நாட்கள் வீட்டினுல் இருந்துள்ளார் ஜுபெய்ர்கான்.

ஆந்த 9 நாட்களும் வீட்டிற்குள் சண்டைகளை ஏற்ப்படுத்தியுள்ளார். அவரின் மோசமான் நடத்தையின் உச்சமாக கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பலரையும் திட்டியுள்ளார். அதுவும் குறிப்பாக வீட்டில் உள்ள பெண்களிடம் மிகக் கடுமையான கெட்ட வார்த்தைகள் பேசியுள்ளார்.

ஆந்த புகாரின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த சல்மான் கான் அவர் வெளியேற்றத்தின் போது அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். நீ இந்த சினிமா தொழில் செய்ய முடியாத அளவிற்கு உன்னை ஆக்கிவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

Advertisement

இதனை மையமாக வைத்து தான் ஜுபெய்ர் கான் சல்மான் கான் மீது மும்பை உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சல்மான் கான் மற்றும் கலர்ஸ் டீவி நிர்வாகம் என்னை மிரட்டுகின்றனர். இது ஒரு எழுதப்பட்ட(ஸ்கிரிப்டட்) நிகழ்ச்சி என்பதை சொல்லக் கூடாது என மிரட்டுகின்றனர். இவ்வாறு புகார் அளித்துள்ளார் ஜுபெர் கான்.

Advertisement
Advertisement