தமிழ் சினிமாவை பொறுத்த வரை கவர்ச்சி நடிகைகள் பலர் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த நீங்காத 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மும்தாஜ். இவர் 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனை அடுத்து இவர் விஜய் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாகியிருந்த குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். அதிலும் இந்த படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

இன்றும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு தான் வருகிறது. அதனைத் தொடர்ந்து இவர் மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால்தான் காதலா, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, ஏழுமலை, லண்டன், வீராசாமி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து இருந்தார்.

Advertisement

மும்தாஜ் குறித்த தகவல்:

இருந்தாலும், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சியின் பிறகு இவர் மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பின் இவர் நடிப்பையே நிறுத்திவிட்டார். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் மும்தாஜ், நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு குர்ஆன் பற்றி நன்றாகவே தெரியும். அல்லா எனக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்றெல்லாம் கட்டளையிட்டு இருக்கிறார்.

சினிமாவில் இருந்து விலக காரணம்:

ஆரம்பத்தில் குரானில் சொல்லப்பட்டிருந்த விஷயங்களின் அர்த்தம் தெரியாமலேயே இருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் அது எனக்கு புரிய ஆரம்பித்தது.இதனால் எனக்குள் மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்தது. அதன் காரணமாகத்தான் நான் சினிமாவில் சில விஷயங்களை செய்ய தவிர்த்தேன். அதோடு நான் சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் அல்லாஹ் தான். ஒரு நாள் வீட்டில் அமர்ந்திருக்கும் போது நானே என்னை எறியாமல் என் உடையை சரி செய்தேன்.

Advertisement

வெளியில் செல்லும்போதும் கண்ணியமான உடைகளை அணிந்தேன். சினிமாவில் ஸ்விம்மிங் சூட் அணிந்து நடித்த ஒருத்தி இப்படிப்பட்ட ஆடை அணிவதா! என்ற ஆச்சரியம் வித்தியாசமானதாக தான் இருக்கும். ஆனால், எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பிறகு தான் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். அதே போல கட்டாயத்தால் தான் ஹிஜாப் அணியவில்லை என்று கூறியிருகிறார்.

திருமணம் குறித்து மும்தாஜ் :

மேலும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் குறித்து பேசி இருக்கும் மும்தாஜ் 20 வயது இருக்கும் போது எனக்கு ஆட்டோ இமயம் நோய் இருந்தது அதற்காக நான் ஏழு ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தேன். நிறைய நாட்கள் நான் வலியோடு இருந்திருக்கிறேன். எனவே நான் யாரை திருமணம் செய்து கொண்டாலும் அவர் என்னுடைய வழியை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது’ என்று குறியுள்ளார்.

Advertisement