விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் தீபாவளிக்கு சரவெடியாய் தெறிக்க விட திரைக்கு வரவிருக்கும் படம் மெர்சல்.

ஏற்கனவே மெர்சலின் ஆடியோ லாஞ்ச்,பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று விஜயின் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றனர்.இந்நிலையில் அட்லீ பிறந்தநாளான இன்று மாலை மெர்சல் படத்தின் மெர்சலான டீசர் வெளியிடப்பட உள்ளது.

Advertisement

இந்த படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.மெர்சல் ரூ.130 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. விஜய் நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான்.
இந்த படத்தின் கதை மூன்று கால கட்டங்களில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. விஜய் மேஜிக் நிபுணர், பஞ்சாயத்து தலைவர், டாக்டர் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: இணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..!

Advertisement

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம்பெற்று உள்ளன.
விஜய், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் இன்று மாலை வெளியாகும் டீசரில் விஜயின் நடனம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களை கவரும் என்றும் விஜய் பேசும் வசனம் ட்ரென்ட் ஆகும் வகையில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement

இன்று மாலையே விஜய் ரசிகர்களுக்கு குட்டி தீபாவளி தான் அப்போ.

Advertisement