தேசிய அளவில் ட்ரெண்டாக பட்டையை கிளப்பி வசூல் செய்து கொண்டிருக்கும் சமூக விழிப்புணர்வு படம் மெர்சலுக்கு இயக்குனர் தங்கர் பச்சான் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
மெர்சல் படம் வெளியானது முதல் படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க சொல்லி தமிழக பி.ஜே.பி வலியுறுத்தி வந்தது.

நேற்று அந்த பிரச்சனை படத்தின் எந்த ஓரு காட்சிகளையும் நீக்கமால் முடிவுக்கு வந்ததாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஹேமா ருக்மணி அறிவித்தார். தற்போது புதிதாக ஒரு கருத்துப் பதிவுடன் வந்துள்ளார் மார்க்கெட் இழந்த இயக்குனர் தங்கர் பச்சான். அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,

‘பணத்தை மட்டுமே குறி வைத்து நடிகர் முகத்தைக் காட்டும் சினிமா பின்னால் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இந்த மக்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள்?’
‘நம் நாட்டில் மட்டுமே மசாலா சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர். உலகத்தில் எந்த மக்களும் இப்படிப்பட்ட கேவலத்தை அனுமதிப்பதில்லை.’ என விஜயின் ரசியல் பிரவேசம் வந்துஅவிடுமோ என்ற பயத்தில் தெரிவுத்துள்ளார்.

Advertisement
Advertisement