என்னங்க விக்ரம் – கைதி Universe, Multiuniverse கான்செப்ட்டை Try செய்துள்ள 10 தமிழ் படங்கள் பற்றி தெரியுமா ? ரஜினி 2 படத்துல பண்ணி இருக்கார்.

0
753
vikram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தைப் பொருத்தவரை பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல்.

- Advertisement -

விக்ரம் படம் ஒரு மல்டி யுனிவர்ஸ் படம் போல தான் அமைந்து இருக்கிறது. கமல் நடிப்பில் வெளியான ஒரிஜினல் விக்ரம் படம் துவங்கி கைதி வரை பல படங்களின் தொடர்ச்சியாகவே தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் லோகேஷ். சொல்லப்போனால் கைதி படத்தின் ஒரு தொடர்ச்சியாகவே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கைதி படத்தில் வந்த அடைக்கலம், அன்பு போன்ற பல கதாபாத்திரங்கள் வந்து சென்று இருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இதேபோல் 10 திரைப்படங்கள் மற்றொரு படத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பாபா – படையப்பா :

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இந்த படத்தில் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் படையப்பா கதாபாத்திரத்தில் வரும் நீலாம்பரியின் கதாபாத்திரம் வரும்.

-விளம்பரம்-

மாற்றான் – கோ :

கேவி ஆனந்த் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாற்றான். இந்த படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்திருப்பார். இவருடன் காஜல் அகர்வால் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தின் கிளைமாக்ஸில் அஜ்மல் இறந்தது போல காண்பிப்பார்கள். அந்த படத்தின் போஸ்டர் மாற்றான் படத்தில் காண்பிக்கப்படும்.

ஓரம் போ – ஆரண்யகாண்டம் :

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தின் ஒரு காட்சியில் அதி வேகமாக ஒரு ஆட்டோ கடந்து செல்லும். அந்த ஆட்டோவிற்கு பின்னால் ‘பிகில்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். இதே ஆட்டோ தான் பின்னர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘ஓரம் போ’ படத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.

பானா காத்தாடி- இதயம் :

பத்ரி வெங்கடேஷ் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பானா காத்தாடி. இந்த படத்தில் அதர்வா, சமந்தா, கருணாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளி அவர்கள் இதயம் முரளி ஆக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இது முரளி மகன் அதர்வாவின் முதல் படமாகும்.

அதிசய பிறவி – மற்றும் பல ரஜினி படங்கள் :

எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளிவந்த படம் அதிசய பிறவி. இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகேஷ், கனகா, சோ ராமசாமி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்த முந்தைய படங்களான அபூர்வ ராகங்கள் மற்றும் ரஜினிகாந்த் நடித்த சில படங்களின் கதாபாத்திரம் குடிகாரன், போலீஸ் வேடங்கள் இந்த படத்தில் காண்பிக்கப்படும்.

மாஸ் என்கிற மாசிலாமணி – எங்கேயும் எப்போதும் :

வெங்கட்பிரபு இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாஸ் என்கிற மாசிலாமணி. இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் வல்லமையை பெற்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார். அப்போது எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த ஜெய் அதே கதாபாத்திரத்தில் சூர்யா உடன் பேசியிருப்பார்.

ரஜினிமுருகன் – வருத்தப்படாத வாலிபர் சங்கம் :

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ரஜினிமுருகன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த போஸ்பாண்டி கதாபாத்திரத்தை காண்பித்து இருப்பார்கள்.

பீஸ்ட் – டாக்டர் :

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கொடுத்துக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் வந்த கிளி, மகாலி கதாபாத்திரம் அப்படியே பீஸ்ட் படத்திலும் நடித்து இருந்தார்கள்.

வை ராஜா வை – புதுப்பேட்டை :

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் வை ராஜா வை. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸில் புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் தோன்றி இருப்பார்,

கோவா – மன்மதன் :

வெங்கட்பிரபு இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கோவா. இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மன்மதன் கதாபாத்திரத்தில் நடித்த சிம்பு தோன்றி இருப்பார்.

Advertisement