தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் ரஜினி நடித்த கூலி படம் பான் இந்தியா அளவில் வெளியாகி வெற்றியை கண்டது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் நடைபெற்று முடிந்தது. கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அடுத்தடுத்து லைன் அப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவிலேயே அந்த படங்களுடைய அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில வாரங்களாகவே ரஜினி குறித்த விமர்சனம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, விஜய் அவர்கள் முதல்வர் ஆனதை அடுத்து ரஜினி வாழ்த்து சொல்லவில்லை என்றும்
ரஜினி, ஸ்டாலினை நேரில் சந்தித்து இரண்டு கட்சி கூட்டணி வைப்பது பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது.
ரஜினி பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக ரஜினி அளித்த பேட்டியில், தேர்தல் முடிவுகள் வந்த உடனே என்னை பற்றி சில விமர்சனங்கள் வந்தது. அந்த விமர்சனங்களை பார்த்துவிட்டு நான் பதில் தராமல் இருந்தால் அது 100 சதவீதம் உண்மையாகிவிடும். அதோடு நான் தேர்தல் முடிவுகள் வந்த உடனே ஸ்டாலினை போய் சந்தித்தேன்.
கொள்கை, அரசியலுக்கு அப்பாற்பட்டது எங்களுடைய நட்பு. 40 ஆண்டுகளுக்கும் மேல் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பு இருக்கிறது. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். நட்பு ரீதியில் தான் நான் ஸ்டாலினை சந்தித்தேன். ஆனால், நான் அவரை சந்தித்து இரு பெரிய கட்சிகளுடன் பேசி வார்த்தை நடத்தியதெல்லாம் சொல்வதெல்லாம் பொய். பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு தரங்கெட்ட ஆளு இந்த ரஜினி கிடையாது. அதேபோல் விஜய் முதல்வரான உடன் நான் வாழ்த்துக்களை சொல்லி விட்டேன். விஜய் முதல்வர் ஆனதில் எனக்கு எந்த பொறாமையும் கிடையாது.

விமர்சனங்களுக்கு பதிலடி:
நான் அரசியலும் இல்லை. ஒருவேளை கமலஹாசன் முதல்வராகி இருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா என்று தெரியவில்லை. விஜய் தனியாக போட்டியிட்டு வந்துள்ளார். இது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான். நான் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக 100% வென்றிருப்பேன். மாற்றம் வேண்டும் என்று விரும்பி தான் மக்கள் விஜய்யை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம் சினிமாவினுடைய 100% புகழ், இளைஞர்கள், பெண்கள்.
அதேபோல் நான் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று மூன்று பக்கங்கள் கொண்ட அறிக்கையை நான் வெளியிட்டு இருந்தேன். விஜய்யை கமலஹாசன் சந்தித்து விட்டார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் விஜயை பார்த்து விட்டார்கள். நான் பார்க்காததை விமர்சித்தார்கள்.
https://www.youtube.com/watch?v=SQWNQ2mcxn4
விஜய் பற்றி சொன்னது:
அப்படி சம்பிரதாயத்திற்கெல்லாம் அவரை சந்திக்க எனக்கு விருப்பமில்லை. நான் ஏற்கனவே விமான நிலையத்தில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கலாம் என்று இருந்தேன். ஆனால், அங்கு எந்த பத்திரிகையாளர்களுமே இல்லை. மேலும், விஜய் கவனமாக செயல்பட வேண்டும். தவெக தொண்டர்கள் இனிதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சின்ன தவறு செய்தாலும் அதில் விஜய் தான் பாதிக்கும். மக்களுக்கு விஜய் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நிறைய எதிர்பாப்போடும் மக்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக நல்லது செய்வார் என்று நினைக்கிறேன். மீண்டும் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.






