""
-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

10 ஆம் வகுப்பு பொது தேர்வில் புஷ்பா பட வசனத்தை எழுதிய மாணவன், அதிர்ச்சியில் ஆசிரியர்கள் – விளங்கிடும்.

0
715
Pushpa
-விளம்பரம்-

பொதுவாகவே திரைப்படத்தில் வரும் பாடல்களும், வசனங்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனதை விட்டு நீங்குவதில்லை. அதனை ரசிகர்கள் நடனம் ஆடி, பேசி வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தின் தாக்கத்தினால் பள்ளி மாணவர் ஒருவர் செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் எல்லோரும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

புஸ்பா படம் பற்றிய தகவல்:

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் புஷ்பா பட பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நடனமாடியும், டப்பிங் கொடுத்தும் ரசிகர்கள் வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அந்த அளவுக்கு புஷ்பா படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா பட தாக்கத்தினால் மாணவர் ஒருவர் தேர்வு தாளில் செய்து இருக்கும் சம்பவம் குறித்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது.

pushpa

தேர்வுக்கான விடைத்தாளில் மாணவர் செய்த செயல்:

-விளம்பரம்-

இந்த தேர்வுக்கான விடைத்தாளில் மாணவர் ஒருவர் புஷ்பா, புஷ்ப ராஜ், விடை எழுதப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் அவ்வபோது இதுபோன்ற வசனம் ஒன்று பேசுவார். எதிரிகளிடம் சவால் விடும் போது நான் புஷ்பா, புஷ்பா ராஜ், புஷ்பா என்றால் பிளவர்(பூ) நினைத்தீர்களா? பயர்(நெருப்பு) என்று கூறுவார். அதை மையப்படுத்திதான் இந்த மாணவன் தேர்வு தாளில் எழுதி உள்ளார். இப்படி தேர்வுக்கான விடைத்தாளில் திரைப்பட வசனம் எழுதும் அளவுக்கு புஷ்பா படம் மாணவனை பாதித்து உள்ளதை குறித்து கல்வியாளர்கள் பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

-விளம்பரம்-

வைரலாகும் தேர்வு விடைத்தாள்:

இன்னொருபக்கம் நெட்டிசன்கள் இந்த செய்தியை சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். மேலும், விடைத்தாளில் அந்த மாணவன் எழுதியுள்ள டயலாக் பகுதியை மட்டும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இப்படி புஷ்பா திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் பிரம்மாண்ட வெற்றி அடைந்தாலும் சமூக வலைத்தளங்களில் படத்தின் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் அவை குறித்த டிக்டாக் வீடியோ உள்ளிட்டவை வருவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

டெல்லியில் நடந்த சம்பவம்:

ஆனால், தேர்வுக்கான விடைத்தாள் எழுதும் அளவுக்கு இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக விடைத்தாளில் வேறு எந்த பதிலையும் எழுதாமல் இந்த ஒரே ஒரு வசனத்தை விடைத்தாள் முழுவதும் அந்த மாணவன் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் டெல்லியில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்து அதில் இருக்கும் கொலை சம்பவத்தை மையமாக வைத்து மூன்று சிறுவர்கள் கொடூரமாக கொலை செய்து இருந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த தேர்வு விடைத்தாள் என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news