அஜித்தின் திரைப்பட வாழ்க்கையில் மாபெரும் ஹிட் படங்களின் வரிசையில் ‘மங்காத்தா’ படத்திற்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ஆம் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படத்தில் அஜித் வித்யாசமான ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்து விடாதா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படம் வெளியாகி 9 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இந்த படம் மீண்டும் திரைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி இருக்கிறாரகள். இந்த படத்தை அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தாலும் இந்த திரைப்படத்தை பலரும் ரசித்து தான் வருகின்றனர்.
இதையும் பாருங்க : லோகோ அறிவிப்புன்னு பாத்தா பிக் பாஸ் 5 ப்ரோமோவையே வெளியிட்ட விஜய் டிவி.
மேலும், இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானால் ட்விட்டரில் மங்காத்தா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துவிடும். இந்த நிலையில் இன்று மங்காத்தா திரைப்படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் ஆன நிலையில் ட்விட்டரில் பலரும் #9yearsofமங்காத்தா என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை இந்த படத்தின் ஆடை வடிமைப்பளார் போட்ட ட்வீட் ஒன்றை காண நேர்ந்தது.
மங்காத்தா திரை படத்தில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் மிகவும் பிரபலமடைந்தது.அதற்கு அடுத்தபடியாக பிரபலம் அடைந்தது என்னவோ அஜித் அணிந்திருந்த அந்த செயின் தான் இந்த நிலையில் இந்த செயின் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை கூறியுள்ளார் இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இந்த படத்தில் இயக்குனர், ஹீரோவிற்கு டாலருடன் கூடிய ஒரு செயின் இருக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்கு காரணம் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த செயினை கழட்டி நெருப்பில் போட்டு விடுவார் ஹீரோ. இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருப்பதால் அந்த செயின் கை விலங்கு போன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். படப்பிடிப்பின் ஒருநாளைக்கு முன்பாகத்தான் அந்த கைவிலங்கு டாலர் இறுதியானது என்று பதிவு உள்ளார்.