விஜய் நடிக்க இருந்த படத்தில்..விக்ரம் நடித்து படு தோல்வியடைந்த படம்.!எந்த படம் தெரியுமா..

0
1823

தமிழில் சினிமா இயக்குனர் விஜய் மில்டன் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது 2014 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான “கோலி சோடா ” என்ற படம் தான். அதன் பின்னரே இவருக்கு முன்னணி நடிகரான விக்ரமை வைத்து “10 எண்றதுக்குள்ள ” என்ற படத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

vijay_milton

இயக்குனர் விஜய் மில்டன் பல படங்களை இயக்கினாலும், முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியதில்லை அதனால் சில வருடங்களுக்கு முன்பே “10 எண்றதுக்குள்ள” என்ற படத்தை முன்னணி ஹீரோ விஜயை வைத்து எடுக்கலாம் என்று நினைத்து, இந்த படத்தின் கதையை நடிகர் விஜயிடன் கூறியுள்ளாராம்.

இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் விஜய்யும் தனக்கு இந்த கதை பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். விஜய்யிடம் ஓகே வாங்கிய பின்னரும் இந்த படத்தை அவரால் விஜய்யை வைத்து எடுக்கமுடியவில்லை. அதற்கு காரணம் இயக்குனர் விஜய் மில்டன் இதற்கு முன்னாள் இயக்கிய படங்கள் தோல்வியடைந்ததால் இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லையாம்.

10 yendrathukulla

அதன் பின்னர் இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் வெளியானது. விக்ரம் , சமந்தா நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் இந்த படமும் இயக்குனர் விஜய் மில்டனுக்கு ஒரு தோல்வி படமாகவே அமைந்து விட்டது.