இந்த படத்தின் வாய்ப்பிற்காக உங்களை சந்தித்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. ட்வீட் செய்த பிரபல நடிகர்.

0
20062
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2009-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குழு’. இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இது தான் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான முதல் படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து சித்தார்த் சந்திரசேகரின் ‘பலே பாண்டியா’, சுதா கொங்கராவின் ‘துரோகி’, ஸ்ரீ பாலாஜியின் ‘குள்ளநரி கூட்டம்’, சீனு ராமசாமியின் ‘நீர்ப் பறவை’, ராம் குமாரின் ‘முண்டாசுப்பட்டி, ராட்சசன்’, சுசீந்திரனின் ‘ஜீவா, மாவீரன் கிட்டு’, ரவிக்குமாரின் ‘இன்று நேற்று நாளை’, முருகானந்தமின் ‘கதாநாயகன்’, செல்லா அய்யாவுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என அடுத்தடுத்து பல படங்களில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்தார்.

-விளம்பரம்-

தற்போது, பிரபு சாலமனின் ‘காடன்’, எழிலின் ‘ஜகஜால கில்லாடி’, மனு ஆனந்தின் ‘FIR’ மற்றும் முரளி கார்த்திக்கின் ‘மோகன் தாஸ்’ என பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் விஷ்ணு விஷால். திரை உலகில் என்ட்ரியாவதற்கு முன்பு விஷ்ணுவின் கனவாக இருந்தது கிரிக்கெட் மட்டும் தான். டி.என்.சி.ஏ லீக் போட்டிகளில் விளையாடிய விஷ்ணு விஷால், தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் “14 வருடங்களுக்கு முன்பு ‘சென்னை 28’ படத்தில் நடிப்பதற்காக நான் இயக்குநர் வெங்கட் பிரபு சாரை சந்தித்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு காரணம் ‘சென்னை 28’ திரைப்படம் வெளி வந்து இன்றோடு (ஏப்ரல் 27-ஆம் தேதி) 13 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆகையால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#13YearsOfChennai28’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

அதை பற்றி அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அந்த ஸ்டேட்டஸிற்கு தான் விஷ்ணு விஷால் இப்படி ஒரு பதில் போட்டிருக்கிறார். சூப்பர் ஹிட்டான ‘சென்னை 28’ படத்தில் மிர்ச்சி சிவா, ஜெய், பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த் ஆகியோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement