15 வது நாளிலும் விவேகம் வசூல் எவ்வளவு தெரியுமா?

0
1721
அஜித்

விவேகம் படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் கூட தமிழகத்தில் மட்டும் 100 திரையரங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

அஜித்விவேகம் படம் வெளிவந்து வெளிவந்த 15வது நாளில் கூட சென்னையில் மட்டும் சுமார்  ரூ 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம் அதோடு இந்த இரண்டு வாரங்களில் சென்னையில் மட்டுமே இந்த படம் சுமார் ரூ 9.80 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

நேற்றும் , இன்றும் விடுமுறை என்பதால் எப்படியும் ரூ 10  கோடி வரை வசூல் வர வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித்புள்ளி விவரங்கள்படி இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்தால் சென்னை பாக்ஸ் ஆபிஸில் பட்டியலில் விவேகம் டாப் 5 இடத்திற்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

அஜித்விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்ற பட்டியலில் விவேகம் சேர்ந்துவிட்டது. அஜித் அவர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இதை எடுத்துக்கொள்ளலாம்.