அம்பிக்கு தொப்பை தெரிய வேண்டும் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் செய்த விஷயம்.

0
33178
anniyan

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டம் என்று சொன்னவுடன் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது சங்கர் தான். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர். மக்களை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு திரைக்கதைகளை கொடுப்பதில் வல்லவர். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், சதா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது என்று சொல்லலாம்.

இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றோடு பதினைந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த படம் குறித்து இயக்குனர் ஷங்கர் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, நான் வேறொரு படம் பண்ணிட்டு இருக்கும் போதே விக்ரம் இடம் அந்நியன் படம் குறித்து சொன்னேன். அதற்கு நீங்கள் ஆயுதம் ஆகி கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

- Advertisement -

அதோடு முடி வளர்க்க ஆரம்பித்து விடுங்கள் என்று சொல்லிட்டேன். அவரும் வளர்க்க ஆரம்பித்தார். ஆனால், அப்போது அவர் பண்ணிட்டு இருந்த படத்துக்காக கொஞ்சம் முடி குறைக்கவேண்டியதாக போனது. அதனால் நான் நினைத்த நீளமான முடி இல்லை. முடி வளர்வதுக்கு வெயிட் பண்ணமுடியாது என்று நினைத்து சில காட்சிகளை எல்லாம் விக் வைத்து எடுத்தோம். பிறகு முடி வளர்ந்தவுடன் ஒரிஜினல் முடியிலேயே எடுத்தோம். மேலும், அந்நியனா மாறும்போது கண் ஆடுறது வேணும் என்று சொன்னேன். அதை ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டார்.

உடம்பில் சில மாற்றங்கள் கொண்டு வந்தது எல்லாமே அவர் ஐடியா தான். ஒவ்வொரு கேரக்டர் ஷூட்டுக்கும் ஒவ்வொரு மாதிரி வருவார். அந்த விசாரணை சீன் எடுக்குறது பயங்கர சவாலாக இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்லயே ஜிம் கிட்டை எடுத்துட்டு வந்து வொர்க் அவுட் பண்ணி உடம்பை ஏத்துவார். அம்பியா நடிக்கும் போது வயிறு தொப்பை தெரிய வேண்டும் என்று நிறைய தண்ணி குடித்து விட்டு நடிப்பார். இப்படி இந்தப் படத்துக்காக விக்ரம் ரொம்ப கஷ்டப்பட்டார். உயிரைக் கொடுத்து நடித்தார் என்று சொல்லலாம். மிக திறமையான கலைஞன் விக்ரம் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement