விஷாலின் வேட்புமனு நிராகரிப்பிற்கான 2 கை எழுத்துக்கள் !

0
5047
vishal-poll

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான K.விஷால் ரெட்டி , ஆர்.கே நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தானும் போட்டியிடப்போவதாக திடீரென அறிவித்தார். இதனால் ஆர்.கே நகர் தேர்தல் களம் என்றும் இல்லாத அளவிற்கு சுயேச்சையகளால் பரபரப்பானது. மேலும், விஷாலும் சுயேச்சையாக ஒரு இளைஞனாக போட்டியிடப் போவதாக அறிவித்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

vishal-poll

மேலும், சுயேச்சையாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிட்டார். இப்படி சுயேச்சைகளால் ஓட்டுக்கள் பிரிவது நிச்சயமாக வந்தது. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு நூலிலையில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் விதமாக சுயேச்சையகளால் பரபப்பானது ஆர்.கே.நகர் தேர்தல் களம்.

மேலும், நடிகர் விஷால் மற்றும் அவரது சகாக்கள் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக, வித்தியாசமா பைக்கில் வந்து மக்களிடம் பரப்புரையை மேற்கொள்ளவுக்கதாக தெரிவித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் ஆர்.கே நகரில் இருந்து விஷாலை வேட்பாளராக முன்மொழிந்த 10 பேரில், இருவர் தங்களது நாமினேசனில் போடப்பட்ட கையெழுத்து தங்களது இல்லை என கடிதம் கொடுத்தனர். இதனால், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தவறு நடந்துள்ளது, எனக்கு நாமினேஷன் செய்த இரண்டு ஆர்.கே.நகர் மக்கள் , அதிமுகவினரால் மிரட்டப்பட்டு நாமினேஷனை வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர், என விஷால் ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தார். மேலும், தாங்கள் மிரட்டப்பட்டதாக கூறும் வாய்ஸ் ரெக்கார்டையும் ஊடகத்தில் வெளியிட்டார் விஷால்.