சார்லிசாப்ளின் இன்ஸபிரேஷன் துவங்கி வடிவேலு, முரளிக்கு பின் விஜய்க்கு வந்த கதை – துள்ளாத மனம் துள்ளும் ரகசியம் சொன்ன இயக்குனர்.

0
2177
thullatha
- Advertisement -

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் தவறவிட்ட படத்தில் மற்றவர் நடித்து மாபெரும் அடைந்திருக்கிறது. அந்த வகையில் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது வேறு யாரும் கிடையாது 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த முரளி தான். எழில் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, டவுசர் பாண்டி என்று என்று பல்வேறு நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போய்விட விஜய் இந்த படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளை மட்டும் வைக்க கேட்டிருக்கிறார். அதன் பின்னர் இந்த படத்தின்பணிகள் துவங்கியிருக்கிறது. அதேபோல இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே சிம்ரனுக்கு பதிலாக ரம்பா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், ரம்பாவும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பின்னர் சிம்ரன் இந்த படத்தில் கமிட்டாகி இருந்தார். சொல்லப்போனால் இந்த படம் ருக்மணிக்காக என்ற பெயரில் முரளி மற்றும் ரம்பா நடிக்க வெளியாக வேண்டியது ஆனால் இது எதுவும் நடக்கவில்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெளியாகி இன்றோடு (ஜனவரி 29, 2021) 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து சுவாரசியமான தகவல்களை இயக்குனர் எழில் கூறியுள்ளார். அதாவது இந்த திரைப்படம் ‘’சார்லிசாப்ளினோட  ‘சிட்டிலைட்ஸ்’ படம்தான் ’துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துக்கு இன்ஸ்ப்ரேஷன். சார்லிசாப்ளின் படம் என்பதால் முதலில் இதை வடிவேலுவுக்காகத்தான் பண்ணேன். அதற்கப்புறம் முரளி சாருக்கு ஏத்த மாதிரி மாத்தினேன்.  ஐம்பது தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொல்லியிருப்பேன். ஆனால்,  ’பார்வை இல்லாத பொண்ணோட கதையைப் படமாகப் பண்ணி யாரும் ஜெயிச்சதில்லை என்று அப்போது ஒரு செண்டிமெண்ட் இருந்தது என்று கூறியுள்ளார்.

அதே போல வடிவேலு மற்றும் முரளி இருவருக்கும் இந்த படம் பிடித்துப்போக ஓகே சொன்னாங்க. ஆனால், இருவருக்கும் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லையாம். இப்படி ஒரு நிலையில் தான் ஆர் பி சௌத்ரி மூலம் விஜய்யிடம் இந்த கதையை சொல்லி இருக்கிறார் எழில். பின்னர் அவருக்கு இந்த படம் பிடித்து போய்விட்டது. முதலில் இந்த படத்தில் பாடல்கள் எதுவும் இல்லாமல் தான் படத்தை எடுக்க திட்ட மிட்டிருந்தாராம் எழில்.

-விளம்பரம்-

அதன் பின்னர் விஜய் தான் இந்த படத்தில் பாடல் வேண்டும் என்று சொன்னாராம். அது போக விஜய்காக தான் இந்த படத்தில் இரண்டு சண்டை காட்சிகளை கூட வைத்தாராம் எழில். முதலில் ஹீரோவோட கேரக்டர் பெயின்டராத்தான் இருந்ததாம், பின்னர் விஜய் ஹீரோ என்பதால் விஜய் கதாபாத்திரத்தை ஒரு பாடகராக மாற்றியுள்ளார் இயக்குனர்.

Advertisement