7 படத்தில் கமிட் செய்திருந்த எஸ் ஏ சி – வேண்டாம் என்று சொல்லியும் இந்த படத்தில் நடிப்பேன் என்று அடம்பிடித்த விஜய் – காரணம் இது தான்.

0
9716
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் தளபதி விஜய். 1995 க்கு பின் இவருடைய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. தளபதி விஜய் அவர்கள் எப்போதும் தான் போடும் ஆட்டோகிராப்பை “பிரியமுடன் விஜய்” என்று தான் போடுவார். அதற்கு காரணம் அவர் நடித்த 19 வது படமான பிரியமுடன் தான். பிரியமுடன் படத்தில் நடித்ததில் இருந்து தான் இவர் தன்னுடைய ஆட்டோகிராப்பை பிரியமுடன் விஜய் என்று போடுகிறார். விஜயின் கையெழுத்து மட்டும் இல்ல அவரது மனதிற்கும் நெருக்கமான படமாக இந்த படம் அமைந்தது. ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தவர் விஜய். அந்த காலகட்டத்தில் விஜய் பிரியமுடன் என்ற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் ஆணித்தரமான நம்பிக்கையை பெற்றார். இந்த படத்தின் கதையை கேட்டு விஜய்யின் அப்பா, அம்மா என அனைவரும் வேண்டாம் என்று கூறினார்கள். படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம், நெகட்டிவ் கிளைமாக்ஸ் இருப்பதால் தான் வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், விஜய் அவர்கள் இந்த படத்தில் நடித்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தார். இப்போதிருக்கும் காலகட்டங்களில் ஹீரோ நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அந்த காலத்தில் ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தும் விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

- Advertisement -

1998 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பிரியமுடன். இந்த படத்தில் விஜய், கௌசல்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜய் அவர்கள் ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்சில் விஜய் இறந்துவிடுவார். இந்த படத்தில் விஜய் அவர்கள் வசந்த் என்ற கதாபாத்திரத்திலும், விஜய்யின் காதலியாக கௌசல்யாவும் நடித்திருப்பார்கள். இதற்கு முன்னே நேருக்கு நேர் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய் அவர்கள் தன் காதலைப் பற்றியும், தன்னுடைய காதலியை பற்றியும் யார் தவறாக பேசினாலும் கோபப்பட்டு பொசசிவ்னஸ் படக்கூடிய இளைஞராக நடித்திருப்பார். கௌசல்யாவுக்கு உண்மைகள் எல்லாம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சில கொலைகள் எல்லாம் செய்து வருகிறார். விஜய் செய்த குற்றங்களிலிருந்து தப்பித்துக் கௌசல்யாவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கௌசல்யாவிடம் உண்மை சொல்ல வரும் கௌசல்யாவின் அப்பா, தன்னுடைய நண்பன் என அனைவரையும் கொல்கிறார். கடைசியில் விஜயும் இறந்து விடுகிறார். படம் முழுக்க ஒரு பெண்ணுக்காக பல குற்றங்கள் செய்து வந்தாலும் இறுதிக் காட்சியில் ப்ரியா உன் கூட வாழ தான் முடியல உன் மடியில் ஆவது செத்துப் போகிறேன் ப்ளீஸ் ப்ரியா என்று அவர் சொல்லும் காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

-விளம்பரம்-

கடைசியில் விஜய் கதாபாத்திரம் செய்தது தவறு என்றாலும் அவர் அவள் மீது வைத்திருக்கும் காதல் உண்மை என்பதை உணர்த்தியது. இதை உணர்ந்த பிரியா அவரை முத்தமிட படமுடியும். இதில் விஜய்யின் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் விஜய்யின் நடிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இந்த படத்தை பார்த்து தல அஜித் கூட பாராட்டி இருந்தார். மேலும், நான் இந்தப் படம் பண்ணியிருக்கணும்’ அப்படினு என்கிட்ட அஜித் சார் சொன்னார். அந்த டைம்லதான் நெகட்டிவ் ரோல் உள்ள `வாலி’ படத்தில் அவர் கமிட் ஆகியிருந்தார் என்று பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார் வின்சன்ட் செல்வா. பிரியமுடன் படம் வெளியாகி 22 ஆண்டுகள் முடிவடைந்தது. இருந்தாலும் இந்த படத்தின் கதை மக்கள் மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை. கடந்த ஆண்டு கூட இந்த படத்தினை சிங்கள மொழியில் ரீமேக் செய்து வெளியிட்டு இருந்தார்கள். இதுவரை இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

Advertisement