தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர், நடிகர்,கதையாசிரியர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் டி ஆர் ராஜேந்திரன். இவரை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் டி ராஜேந்திரன் கதை எழுதி இசையமைத்து வெளியாகியிருந்த படம் ஒரு தலை ராகம்.
இந்த படத்தை இப்ராஹிம் இயக்கியிருந்தார். இந்த படம் 1980 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவு வெற்றி கொடுத்தது. இந்த படம் திரையரங்கில் மட்டும் 365 நாட்கள் ஓடி இருந்தது. இந்த படத்தில் ஷங்கர், ரூபா, சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை 1999 ஆம் ஆண்டில் தெலுங்கிலும் வெளியிட்டு இருந்தார்கள். அதோடு இந்த படம் வெளியாகி 42 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து பலரும் அறிந்திராத தகவலை பற்றி இங்கு பார்க்கப் போகிறோம்.
ஒரு தலை ராகம் படம்:
படத்தில் ராஜா என்பவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ரொம்ப அமைதியான, நல்ல குணம் கொண்டவர். இவர் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் மாணவி சுபத்ராவை காதலிக்கிறார். ஆனால், சுபத்ரா ராஜாவின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், சுபத்ராவின் அப்பா தன்னுடைய சிறு வயதிலேயே இரண்டு மகன்களையும் மனைவியையும் விட்டு சென்று விட்டார். இதனால் சுபத்ராவின் அம்மா தான் கஷ்டப்பட்டு மகள்களை வளர்த்தார்.
படத்தின் கதை:
அது மட்டும் இல்லாமல் தன்னை போல் தன்னுடைய மகள்களும் ஏமாந்து விடக்கூடாது என்று சுபத்ராவின் அம்மா சொல்லி சொல்லி அவர்கள் இருவரையும் வளர்க்கிறார். இதனால் சுபத்ராவுக்கு ஆண்கள் மீதும், திருமண வாழ்க்கை மீதும் பயம் வருகிறது. ஒரு கட்டத்தில் சுபத்ராவின் மீது காதலில் இருக்கும் ராஜா மரணத்தின் பிடியில் சிக்கி விடுகிறார். இதை அறிந்த சுபத்ரா ராஜாவிடம் தன்னுடைய காதலை சொல்ல வருகிறார். ஆனால், ராஜா இறந்து விடுகிறார்.
படம் குறித்த தகவல்:
இதில் சுபத்ராவுக்கு ராஜாவுடைய சடலமே மிஞ்சியது. மேலும், இந்த படம் சோகத்தில் முடிந்தாலும் மிகப்பெரிய அளவில் கிட் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் டி ஆர் இசையமைத்திருந்த பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த காலத்திலேயே கல்லூரி சூழலை திரையில் அப்படியே பிரதிபலிக்க வைத்திருந்தார்கள். இதனால் இளைஞர்கள் மத்தியில் இந்த படம் நன்றாக வரவேற்பு பெற்றத்து.
படத்தின் வெற்றி:
ஆரம்பத்தில் இந்த படம் மக்களிடம் பிரபலமாகவில்லை என்றாலும் படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் இந்த படம் வெற்றி பெற்றது. தான் விரும்பிய பெண் தன்னை காதலிக்கவில்லை என்ற கதாநாயகனின் தாழ்வு மனப்பான்மையே படம் முழுக்க சென்றது. இப்படி மாபெரும் வெற்றி பெற்ற டி ஆர் ராஜேந்திரனின் ஒருதலை ராகம் படம் வெளியாகி இன்றோடு 42 வருடங்களை பூர்த்தி செய்து இருக்கிறது.