முண்டாசுபட்டி படத்தில் ஊர் மக்கள் அனைவரும் முண்டாசு அணிந்ததுக்கு பின்னால் இப்படி ஒரு வியப்பான காரணம.

0
1577
mundasupatti
- Advertisement -

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான முண்டாசுப்பட்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் விஷ்ணு, நந்திதா, காளி வெங்கட், ஆனந்த்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். 2011 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படமாக வந்தது தான் திரைப்படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 6 வருடங்கள் நிறைவடைந்தை தொடர்ந்து இயக்குனர் ராம்குமார் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

-விளம்பரம்-
முண்டாசுப்பட்டி

ஏன் அந்த ஊருக்கு முண்டாசுப்பட்டி என்று பெயர் வைத்தீர்கள்?
இது எல்லாம் 80 காலகட்டத்தில் நடந்த கதை. நாங்க அந்த காலத்தில் பயன்படுத்தின பொருள்கள் வேண்டும் என்று முடிவு செய்தோம். இந்த படத்தில் முக்கியமானதே விக். கோபி, அழகுமணி கதாபாத்திரத்துக்கு விக் வாங்குறதுக்கு ஒரு நாளுக்கு 600 ரூபாய் ஆனது. அப்போ அந்த ஊர் மக்களுக்கும் விக் வைக்க வேண்டும் என்றால் 50 விக் வாங்கணும். ஷார்ட் ஃபிலிம் பண்ணும்போது பட்ஜெட் இல்லை. அதனால் எல்லோருக்கும் முண்டாசு கட்டிவிட்டு பண்ணோம். அதனால் ஊருக்கு முண்டாசுப்பட்டி என்று பெயர் வைத்தேன். இது சினிமாவாக மாறும்போது வானமுனி சாமிக்கே முண்டாசு கட்டிவிட்டு அதனால் ஊரூலில் இருக்கிற எல்லோரும் முண்டாசு கட்டி செட் பண்ணிட்டேன்.

- Advertisement -

முண்டாசுப்பட்டி என்று சொன்னவுடன் முதலில் ஞாபகத்துக்கு வருவது ராமதாஸுடைய முனீஷ்காந்த் கேரக்டர் தான். தற்போது அதுவே அவர் அடையாளமா மாறியிருக்கு. அதை பற்றி சொல்லுங்கள்? ஷார்ட் ஃபிலிம்மில் நடித்த வரை டப்பிங் கொடுக்க சென்னை வரவைக்க முடியவில்லை. அந்தக் கேரக்டருக்கு டப்பிங் கொடுக்க ஒருத்தர் வேண்டும் என்று காளி வெங்கட் இடம் சொன்னேன். அவர் தான் ராமதாஸை அறிமுகப்படுத்தி வைத்தார். ராமதாஸ் டப்பிங் கொடுக்கும் போது முனீஷ்காந்த் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார் . நான் எழுதியதை சூப்பராக தன்னுடைய குரல் மூலம் கொண்டுவந்துட்டார். பிறகு அந்தக் கேரக்டருக்கு நிறைய பேரை ஆடிஷன் பண்ணிப் பார்த்தோம். ஆனால், யாரும் செட்டாகவில்லை.

முண்டாசுப்பட்டி

பின் ஷார்ட் ஃபிலிம்மில் நடித்த வரையே நடிக்க வைக்கலாம் என்றும் டப்பிங் ராமதாஸை கொடுக்க வைக்கலாம் என்றும் நினைத்தேன். ராமதாஸ் இடம் நாளைக்கு ஆபீஸ் வாங்க உங்க குரலை எப்படி பயன்படுத்தலாம் என்று சொன்னேன். மறுநாள் அவரை வாய்ஸ் கொடுக்க சொன்னால் ராமதாஸ் நடித்தே காட்டிட்டார். அவர் சூப்பராக பண்ணிட்டார். இவரே சரியா இருப்பார் என்று அந்தக் கேரக்டருடைய எல்லா சீனையும் கொடுத்து ஆடிஷன் பண்ணோம். ராமதாஸ் வேற லெவல் கலக்கிட்டார். அப்படி நாங்க உருவாக்கின ஒரு கேரக்டர் ஒருத்தருடைய அடையாளமாக மாறும்போது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம். ராமதாஸ் நடித்த மத்த படங்களுடைய டைட்டில் கார்டுல முனீஷ்காந்த்னு வரும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement