உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளது. உலகளவில் இந்த நோயால் கடந்த சில மணி நேரத்திற்க்கு முன்பாக வரை 14,87,870 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை உலகளவில் இந்த நோயினால் 88,630 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோயினால் இந்தியாவில் 5,734 பேருக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 169 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது.

மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், தினகூலி நம்பி வாழும் மக்கள்களுக்கு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : உங்களுக்கு மேனஸ் தெரியாதா? நெப்போலினை அசிங்கப்படுத்தினரா விஜய் ? வைரலாகும் வீடியோ.

Advertisement

அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் பல்வேறு நிதிகளை அளித்து வருகின்றனர். மேலும், மக்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தேவகி பண்டாரி என்ற 60 வயது மூதாட்டி தனது சேமிப்பு கணக்கை கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய இருக்கிறார்.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி என்ற மாவட்டத்தில் கௌசார் என்ற பகுதியில் வசித்து வருகிறார் 60 வயது மூதாட்டியான தேவகி பந்தாரி. திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவரது கணவர் இறந்திருக்கிறார் மேலும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வரும் தேவகி சேமிப்பு மற்றும் பென்ஷன் பணத்தின் மூலம் சேர்த்துவைத்த 10 லட்ச ரூபாயை பிரதம மந்திரியின் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : டிக் டாக் மோகம். விபரீதத்தில் முடிந்த நடனம், கண்ணாடியை உடைத்து விழுந்து நடிகை. வைரலாகும் வீடியோ.

Advertisement

இதுகுறித்து தேவகி பந்தாரி தெரிவிக்கையில் நான் நிரந்தர வைப்பு நிதி மற்றும் பென்ஷன் பணம் மூலம் 10 லட்ச ரூபாய் வரை சேமித்து வைத்திருந்தேன் நான் தற்போது ஒரு சிறிய வாடகை வீட்டில் தனியாக வசித்து வருவதால் எனக்கு அவ்வளவாக செலவு கிடையாது எனவே இந்த பணம் கரோனா வைரஸ் பிரச்சனைக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார் 60 வயதில் தனது சொந்தக் காலில் வாழ்ந்து வரும் இந்த மூதாட்டியின் செயலை கண்டு பலரும் மன நெகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்

Advertisement
Advertisement