டிக் டாக் மோகம். விபரீதத்தில் முடிந்த நடனம், கண்ணாடியை உடைத்து விழுந்து நடிகை. வைரலாகும் வீடியோ.

0
90364
Lele Pons
- Advertisement -

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட தற்போது இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக் டாக் செயலி தான். தற்போது ஆண், பெண், மூத்தவர்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த டிக் டாக் மிகவும் பிரபலம். தற்போது சமூக வலைத்தளங்களில் டிக்டாக் செயலி தான் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். பலரும் தங்களுடைய நடிப்பு நடன திறமைகளை எல்லாம் டிக் டாக் செயலி தான் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த செயலியை சீனா தான் முதன் முதலாக ஆரம்பித்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் 84 கோடி மக்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்து உள்ளார்கள். தினசரி இந்த செயலியை 4 கோடிக்கும் மேல் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த டிக் டாக்கில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாகி வருகின்றன.

- Advertisement -

டிக் டாக் மூலமாகவே பலர் பிரபலமாகி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த செயலியை பயன்படுத்திய பிரபல நடிகைக்கு விபரீதமான விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் Eleonora Lele Pons Maronese. இவர் மாடல், நடிகை, நடனக்கலைஞர், பாடகி என பல முகங்களை கொண்டு உள்ளார்.

யூடியூப் இணையதளத்தில் இவர் பல வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இவரை யூடியூபில் 16 மில்லியன் பேருக்கு மேலும், இன்ஸ்டாகிராமில் 38.6 மில்லியனுக்கு பேருக்கும் மேல் பாலோ செய்கிறார்கள். ஹாலிவூட்டில் மிகப் பிரபலமானவர் ஆவார். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது இவர் டிக் டாக்கில் வீடியோ ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அப்படி அவர் நடனம் ஆடும் போது கடைசியில் கண்ணாடி கதவில் மோதி கீழே விழுந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

மேலும், பல பேர் இந்த மாதிரி டிக் டாக்கில் வீடியோ செய்கிறோம் என்று பல பிரச்சனைகளில் மாட்டி உள்ளார்கள். இனிமேல் ஆவது டிக் டாக் வீடியோ செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று பலர் கருத்துக்களை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement